ஹாத்ரஸ் நெரிசல்: சம்பவ இடத்தில் தடயவியல் குழு விசாரணை!

ஹாத்ரஸ் நெரிசல்: சம்பவ இடத்தில் தடயவியல் குழு விசாரணை! சம்பவ இடத்தில் மாநில காவல்துறையின் தடயவியல் குழு விசாரணை…சம்பவ இடத்தில் தடயவியல் குழு-

உத்தரப் பிரதேசத்தின், ஹாத்ரஸில் நடைபெற்ற சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக சம்பவ இடத்திற்கு மாநில காவல்துறையின் தடயவியல் குழுவுடன், மோப்ப நாய் படையும் சோதனை நடத்தி வருகின்றனர்.

ஹாத்ரஸ் மாவட்டத்தின் புல்ராய் கிராமத்தில் உள்ள திறந்தவெளி மைதானத்தில் போலே பாபா என்ற ஆன்மிக குருவின் சொற்பொழிவு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தனியார் சார்பில் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில் பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் பங்கேற்றனர். மாலையில் நிகழ்ச்சி முடிந்து, மைதானத்தைவிட்டு மக்கள் கிளம்பும்போது கடும் நெரிசல் ஏற்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த ஏராளமான மக்கள் "போலே பாபா"விடம் ஆசி பெறவும், அவரது காலடி மண்ணை சேகரிக்கவும் மக்கள் முண்டியடித்தபோது நெரிசல் ஏற்பட்டு, ஒருவர் மீது மற்றொருவர் விழுந்தனர். கூட்டநெரிசலில் சிக்கி இதுவரை 121 பேர் உயிரிழந்ததாகவும், 28 பேர் காயமடைந்ததாகவும், 19 பேரின் உடல் அடையாளம் காணப்படவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி மருத்துவமனை அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் நேரில் சென்று விசாரித்து வருகிறார்.

முதற்கட்ட விசாரணையில் சம்பவ இடத்தில் பக்தர்களின் உடைமைகளான காலணிகள் உள்ளிட்ட சில பொருள்களை கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் தடயவியல் குழு உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

மேலும், சம்பவ இடத்தில் தடயவியல் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

திருப்பதி லட்டு விவகாரம்; சிறப்பு புலனாய்வு குழு விசாரணை செய்ய முடிவு

சந்திரபாபு நாயுடு கடவுளிடமே அரசியல் செய்கிறார் – ரோஜா

‘கோவில்களின் நிர்வாகம் பக்தியுள்ள இந்துக்களிடம் இருக்க வேண்டும்’ – சத்குரு ஜக்கி வாசுதேவ்