ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் கவனம் ஈர்க்கும் ‘மக்காமிஷி’ பாடல்

ஜெயம் ரவி நடிக்கும் "பிரதர்" படத்தின் ''மக்காமிஷி'' பாடல் தற்பொழுது வெளியாகியுள்ளது.

சென்னை,

ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் பிரைவேட் லிமிடெட்டின் எட்டாவது தயாரிப்பான இத்திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களும் கண்டு மகிழக்கூடிய வகையில் கலகலப்பான குடும்ப படமாக உருவாகி வருகிறது. 'பிரதர்' படத்தில் பிரியங்கா மோகன் நாயகியாக நடிக்க, நட்டி, பூமிகா, சரண்யா பொன்வண்ணன், விடிவி கணேஷ், சீதா, அச்யுத், பிரபல தெலுங்கு நடிகர் ராவ் ரமேஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்த படமானது அக்கா – தம்பி உறவை அடிப்படையாக கொண்டு ஒரு குடும்ப பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து படமானது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.

'பிரதர்' திரைப்படத்திற்காக 'ஒரு கல் ஒரு கண்ணாடி'க்குப் பிறகு இயக்குநர் ராஜேஷும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜும் மீண்டும் இணைந்துள்ளதால் இதன் பாடல்கள் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. ஒளிப்பதிவை விவேகானந்த் சந்தோஷம் கையாளுகிறார். பிரபல ஒளிப்பதிவாளர் பி சி ஸ்ரீராம் உடன் பல்வேறு படங்களில் பணியாற்றிய இவர், தனுஷ் நடித்த 'மாறன்', ஜி.வி பிரகாஷ் நடித்த 'செம' மற்றும் ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் ஜெயம் ரவி நடித்த 'அகிலன்' உள்ளிட்ட திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில், கிளிம்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

Take this ! Take this !! Take Everything !!! of #MAKKAMISHI from #Brotherhttps://t.co/q11DXvGrHv ▶️A @jharrisjayaraj Vibe Lyrics ✍️ & Vocal #Paaldabba Choreography @iamsandy_off@Screensceneoffl@actor_jayamravi@rajeshmdirector@priyankaamohan…

— Jayam Ravi (@actor_jayamravi) July 20, 2024

இந்த நிலையில், பிரதர் படத்தின் முதல் பாடல் "மக்காமிஷி" தற்பொழுது வெளியாகியுள்ளது. இப்பாடலை பால் டப்பா பாடியுள்ளார். "மக்காமிஷி" என்ற வார்த்தைக்கு கெத்து, திமிரு, என்று அர்த்தம். படத்தின் வீடியோ பாடல் தற்பொழுது வெளியாகியுள்ளது.

Original Article

Related posts

சூர்யாவின் ‘கங்குவா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

வேட்டையன்: பகத் பாசிலின் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியீடு

எமர்ஜென்சி ரிலீஸ்: தணிக்கை வாரியத்துக்கு கெடு விதித்த மும்பை உயர்நீதிமன்றம்!