ஹிந்தி படம்.. ஹிந்தித் திணிப்புக்கு எதிரான படம்..: விளக்கமளித்த கீர்த்தி சுரேஷ்!

ஹிந்தி படம்.. ஹிந்தித் திணிப்புக்கு எதிரான படம்..: விளக்கமளித்த கீர்த்தி சுரேஷ்!

நடிகை கீர்த்தி சுரேஷ் ரகு தாத்தா படத்தின் கதை குறித்து பேசியுள்ளார்.

தென்னிந்தியளவில் முக்கிய நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். பல முன்னணி நடிகர்கள் நடித்து பல ரசிகர்களைப் பெற்றிருப்பவர்.

தற்போது, தெறி ஹிந்தி ரீமேக்கான பேபி ஜான் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், கீர்த்தி சுரேஷ் முன்னணி கதாபாத்திரமாக நடித்த ரகு தாத்தா படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (ஜூலை 20) நடைபெற்றது.

நிகழ்வில் பேசிய கீர்த்தி சுரேஷ், “ரகு தாத்தா படத்தின் கதையைக் கேட்டபோது எனக்கு சரியாக வருமா என யோசித்தேன். ஆனால், இயக்குநர் உறுதியாக இருந்தார். நான் நடித்த ஹிந்திப் படமான பேபி ஜான் டிசம்பர் மாதம் திரைக்கு வரும் நேரத்தில், ஹிந்தி திணிப்புக்கு எதிரான ரகு தாத்தா படத்தில் நடித்திருப்பதைப் பற்றி பலரும் கேட்டனர். இந்தப் படம் பெண்கள் மீதான திணிப்பை பேசுகிறது. அதில், இயக்குநர் ஹிந்தியைக் கையில் எடுத்திருக்கிறார். நல்ல நகைச்சுவைப் படமாக உருவாகியுள்ளது. அனைவருக்கும் இப்படம் பிடிக்கும்” எனக் கூறினார்.

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்