புதுடெல்லி,
இஸ்ரேல் – ஹிஸ்புல்லா அமைப்பு இடையேயான தாக்குதல் அதிகரிப்பால் இந்தியர்கள் லெபனான் செல்ல கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
ஹமாஸ் குழுவிற்கு ஆதரவு தெரிவிக்கும் லெபனானின் ஹிஸ்புல்லா குழுவிற்கு எதிராக இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் லெபனானில் இருக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது.
மேலும் லெபனானில் உள்ள இந்தியர்கள் தொடர்பில் இருக்க வேண்டும் என்றும் அங்குள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது.
இதன்படி லெபனான் இந்திய தூதரகம் சார்பில் இந்திய நாட்டவர்களுக்கான ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக லெபனான் இந்திய தூதரகம் தனது எக்ஸ் வலைதளத்தில், "பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள சமீபத்திய நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டு, லெபனானில் உள்ள அனைத்து இந்திய நாட்டவர்களும், லெபனானுக்குச் செல்லத் திட்டமிடுபவர்களும், எச்சரிக்கையுடன் செயல்படவும், பெய்ரூட்டில் உள்ள இந்திய தூதரகத்துடன் தங்கள் மின்னஞ்சல் ஐ.டி. மூலம் தொடர்பில் இருக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்:
தொடர்புக்கு: cons.beirut@mea.gov. அல்லது அவசர தொலைபேசி எண் +96176860128" என்று அதில் பதிவிடப்பட்டுள்ளது.
Advisory for Indian Nationals. pic.twitter.com/SuFyv23dhq
— India in Lebanon (@IndiaInLebanon) July 29, 2024