ஹெட், மார்ஷ் அதிரடி: 9.4 ஓவர்களில் ஆஸ்திரேலியா அபார வெற்றி!

ஆஸ்திரேலிய அணி ஸ்காட்லாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டிகளில் விளையாடவிருக்கிறது.

முதல் போட்டியில் டாஸ் வென்ற ஆஸி. கேப்டன் மிட்செல் மார்ஷ் பந்துவீச்சை தேர்வு செய்தார். சீன் அப்பாட் 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.

20 ஓவர் முடிவில் ஸ்காட்லாந்து அணி 9 விகெட்டுகள் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்தது.

155 ரன்களை இலக்காகக் கொண்டு விளையாடிய ஆஸ்திரேலிய அணி 9.4 ஓவர்களில் 156/3 ரன்கள் எடுத்து இலக்கை கடந்து அபார வெற்றி பெற்றது.

டிராவிஸ் ஹெட் 25 பந்துகளில் 80 ரன்கள், மிட்செல் மார்ஷ் 12 பந்துகளில் 39 ரன்கள், ஜோஷ் இங்கிலீஷ் 13 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தார்கள்.

பெரிதும் எதிர்பார்த்த் ஜேக் ஃபிரேசர் மெக்கர்க் டக் அவுட்டானார். 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என ஆஸி. முன்னிலை வகிக்கிறது.

2ஆவது டி20 போட்டி செப்.6ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.

Related posts

கேரள நபருக்கு புதிய வகை குரங்கு அம்மை: நாட்டில் முதல் முறை; கண்காணிப்பு தீவிரம்

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 492-ஆக உயர்வு!

சென்னை உள்பட தமிழகத்தில் 14 இடங்களில் என்ஐஏ சோதனை