ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்.. அமலாக்கத்துறை மேல்முறையீடு!

ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்.. அமலாக்கத்துறை மேல்முறையீடு!

ஹேமந்த் சோரன்

ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

ஜார்கண்ட் முதலமைச்சரான ஹேமந்த் சோரன் நிலமோசடி வழக்கில் கடந்த ஜனவரி 31ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். முன்னதாக அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த சம்பாய் சோரன் முதலமைச்சரானார்.

சுமார் 5 மாதங்கள் சிறையில் இருந்த ஹேமந்த் சோரனுக்கு ஜூன் 28ஆம் தேதி ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. இதையடுத்து அவர் சிறையில் இருந்து விடுதலையானார். தொடர்ந்து சம்பாய் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சராக ஹேமந்த் சோரன் மீண்டும் பதவியேற்றார். மேலும் சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையை நேற்று நிரூபித்தார்.

விளம்பரம்ALSO READ | நாளை விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு… முன்னேற்பாடுகள் தீவிரம்!

இந்த நிலையில், ஹேமந்த் சோரனுக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது. ஹேமந்த் சோரனுக்கு ஜாமின் வழங்கும் முன்பாக, அனைத்து அம்சங்களையும் உயர்நீதிமன்றம் ஆராயவில்லை என்றும், ஜாமின் வழங்கிய உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Enforcement Directorate
,
jharkhand

Related posts

விழுப்புரம்- திருச்சி பயணிகள் ரெயில் சேவையில் மாற்றம்

ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை குற்றப் பரம்பரையாக சித்தரிப்பதா? நடிகை கஸ்தூரிக்கு ஆ.ராசா கண்டனம்

‘2கே லவ் ஸ்டோரி’ படத்தின் டீசர் குறித்த அப்டேட்