ஹேமா கமிட்டி அறிக்கை: தெரியாது என பதிலளித்த ரஜினிகாந்த்

ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து தனக்கு எதுவும் தெரியாது என நடிகர் ரஜினிகாந்த் பதிலளித்துள்ளார்.

மலையாள திரையுலகில் பெண்கள் சந்திக்கும் பாலியல் துன்புறுத்தல் மற்றும் சுரண்டல் நிகழ்வுகளை வெளிப்படுத்திய நீதிபதி ஹேமா குழு அறிக்கையைத் தொடர்ந்து, பல்வேறு இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் மீதான பாலியல் புகார்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்தப் புகார்களை விசாரிக்க 7 காவல் துறை அதிகாரிகள் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை மாநில அரசு அமைத்துள்ளது. ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏவும் நடிகருமான முகேஷ் உள்பட பல்வேறு நடிகர்கள் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப் பதியப்பட்டது.

மலையாள திரையுலக பாலியல் சர்ச்சை: மௌனம் கலைத்த மம்மூட்டி

நடிகர்கள் மீதான குற்றச்சாட்டுகளை அடுத்து, மோகன்லால் தலைமையிலான மலையாள திரைப்பட நடிகர்கள் சங்கத்தின் நிர்வாகக் குழு ராஜிநாமா செய்தது. இதைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் மலையான முன்னணி நடிகர்களான மோகன்லால், மம்மூட்டி ஆகியோர் மௌனம் கலைத்தனர்.

இந்த நிலையில் மலையாள திரையுலகை உலுக்கும் ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து நடிகர் ரஜினியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் மன்னிக்கவும், அது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று பதிலளித்துள்ளார். மேலும் கூலி படம் நன்றாக போவதாக தெரிவித்த அவர், ஃபார்முலா 4 கார் பந்தயம் வெற்றி பெற வாழ்த்துள் கூறினார்.

'வேட்டையன்' ரிலீஸை ஒட்டி, 'கங்குவா' ரிலீஸை தள்ளிவைப்பதாக நடிகர் சூர்யா கூறியது தொடர்பான கேள்விக்கு நடிகர் ரஜினிகாந்த் அளித்த பதிலில், சூர்யாவின் அன்பிற்கும், பாசத்திற்கும் நன்றி. அவரின் கங்குவா படமும் நல்லா போகணும். இவ்வாறு கூறிவிட்டு அவர் காரில் புறப்பட்டு சென்றார்.

Related posts

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: இரு நாள்களில் 558 பேர் பலி!

உடல் எடையை அதிகரிக்கும் ராம் சரண்!

தொடரை வெல்லும் முனைப்பில் ஆஸி: இங்கிலாந்து டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!