ஹேமா குழுவின் முழு அறிக்கையும் தேவை: தேசிய மகளிர் ஆணையம்

மலையாள திரையுலகில் பெண்கள் சந்திக்கும் பாலியல் துன்புறுத்தல் நிகழ்வுகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க நீதிபதி ஹேமா குழுவின் முழு அறிக்கையையும் பெற முயற்சித்து வருவதாக தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே வெளியான அறிக்கையில் சில தகவல்கள் மட்டுமே பொதுவெளியில் வெளியிடப்பட்ட நிலையில் ஆணையம் இவ்வாறு தெரிவித்துள்ளது.

எந்த அதிகாரக் கும்பலிலும் நான் இல்லை: பாலியல் புகார் விவகாரத்தில் மோகன்லால்

இதுதொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'பெண்களின் உரிமைகள், பாதுகாப்பான மற்றும் சமத்துவ பணிச்சூழலை உறுதிப்படுத்தும் நோக்கில், பாதிக்கப்பட்ட பெண்களின் புகார்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விவாதிக்க ஆணையம் முடிவு செய்துள்ளது. எனவே, நீதிபதி ஹேமா குழுவின் முழு அறிக்கையையும் பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன' என தெரிவிக்கப்பட்டது.

Related posts

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: இரு நாள்களில் 558 பேர் பலி!

உடல் எடையை அதிகரிக்கும் ராம் சரண்!

தொடரை வெல்லும் முனைப்பில் ஆஸி: இங்கிலாந்து டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!