ஹைதராபாத்தில் முத்தியாலம்மன் கோவில் சிலை சேதம்: மக்கள் ஆர்ப்பாட்டம்

ஹைதராபாத்தில் முத்தியாலம்மன் கோவில் சிலை சேதப்படுத்தப்பட்டிருப்பதைக் கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் பாஸ்போர்ட் அலுவலகம் அருகே முத்தியாலம்மா கோவில் உள்ளது. இங்குள்ள சிலையை மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அப்பகுதி மக்கள் முத்தியாலம்மா கோவிலின் முன்பு திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மும்பை-ஹௌரா எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

மேலும் உள்ளூர் மக்கள் ஒருவரைப் பிடித்து மார்க்கெட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட போலீஸாரிடம் அவர்கள் ஒப்படைத்தனர். இதற்கிடையே கோவில் சிலை சேதப்படுத்தப்பட்டதாகக் கூறி ஆர்ப்பாட்டம் நடத்திய மாதவி லதா உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்தனர்.

இதுகுறித்து மாதவி லதா கூறுகையில், " சிலை உடைக்கப்பட்டதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காக என்னை சிறைக்கு அழைத்துச் செல்கிறார்கள்.

இதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்" என்கிறார். தற்போது அப்பகுதியில் போலீஸார் மேலும் குவிக்கப்பட்டுள்ளதால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.

முன்னதாக ஹைதராபாத்தில் நம்பள்ளி கண்காட்சி மைதானத்தில் உள்ள துர்கா தேவி சிலையை அண்மையில் மர்ம நபர்கள் சேதப்படுத்திய நிலையில் தற்போது மேலும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Related posts

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: ஆளுநருக்கு எந்தத் தொடர்பும் இல்லை

டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி புதிய சாதனை!

பாபா சித்திக் கொலை வழக்கு: மேலும் 5 பேர் கைது