ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் பைக்! விரைவில் அறிமுகம்…

ஆட்டோமொபைல் நிறுவனங்களில் முன்னணி நிறுவனமான ஹோண்டா, புதிய எலெக்ட்ரிக் பைக்கை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.

இரு சக்கர வாகன விற்பனையில் ஹோண்டா நிறுவனம் தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகிறது. அதிலும் ஹோண்டா ஆக்டிவா பைக் டாப் 5 விற்பனையில் ஒன்றாக இருக்கிறது. ஆண், பெண் இரு தரப்பினருக்கும் பொதுவான பைக்காக இருப்பதால் வாடிக்கையாளர்களின் விருப்பமாக உள்ளது.

இந்நிலையில் தற்போது மின் வாகனங்கள் உற்பத்தி அதிகரித்து வரும் நிலையில், ஹோண்டா நிறுவனம் விரைவில் மின் வாகனத்தை அறிமுகப்படுத்துகிறது.

இதையும் படிக்க | தங்கம் விலை நிலவரம்: ஒரு கிராமே ரூ.7 ஆயிரத்தைத் தாண்டியதா?

ஹோண்டா ஆக்டிவா பெயரிலேயே அறிமுகமாகும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர், டிஜிட்டல் மீட்டர், ப்ளூடூத், எல்இடி விளக்குகள், டிஸ்க் பிரேக் உள்ளிட்ட பல அம்சங்களை கொண்டுள்ளது.

ஒருமுறை பேட்டரி சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 1500 கிமீ வரை செல்லும் அளவில் வடிவமைக்கப்படவுள்ளது.

இதற்கான தயாரிப்பு இந்தாண்டு இறுதியில் தொடங்கும் என்றும் 2025 மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்படலாம் என்று தெரிகிறது.

இதன் விலை ஒரு லட்சம் ரூபாய் முதல் ரூ. 1.20 லட்சம் ரூபாய் வரை இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஹோண்டா ஆக்டிவா மட்டும் இதுவரை 3 கோடி பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

இதன் விலை ரூ. 1.05 லட்சம் முதல் ரூ. 1.12 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது.

Related posts

திருப்பதி பிரம்மோற்சவம் : தமிழகத்தில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

மறைந்த பாடகர் எஸ்.பி.பி பெயரில் சாலை – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

செய்திகள் சில வரிகளில்……