10 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 கிரிக்கெட்டுக்கு திரும்புகிறாரா ஜேம்ஸ் ஆண்டர்சன்?

இங்கிலாந்து அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் டி20 போட்டியில் விளையாட இருப்பதாக கூறப்படுகிறது.

இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் அண்மையில் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். ஓய்வு பெற்ற பிறகு இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சு ஆலோசகராக ஆண்டர்சன் செயல்பட்டு வருகிறார்.

42 வயதாகும் ஜேம்ஸ் ஆண்டர்சன் வெள்ளைப் பந்து போட்டிகளில் கடைசியாக கடந்த 2019 ஆம் ஆண்டு விளையாடியிருந்தார். அதன் பின், அவர் வெள்ளைப் பந்து போட்டிகளில் விளையாடவில்லை. அவர் கடைசியாக கடந்த 2014 ஆம் ஆண்டு உள்ளூர் டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியிருந்தார். இங்கிலாந்து அணிக்காக டி20 போட்டிகளில் கடைசியாக 2009 ஆம் ஆண்டு விளையாடியிருந்தார்.

கே.எல்.ராகுலுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்: ரோஹித் சர்மா

10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் டி20 போட்டியில்…

10 ஆண்டுகளுக்கு முன்பாக டி20 கிரிக்கெட்டில் விளையாடியிருந்த ஆண்டர்சன், தற்போது மேஜர் லீக் டி20 தொடரில் விளையாட இருப்பதாக கூறப்படுகிறது. 2025 ஆம் ஆண்டுக்கான மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் ஜேம்ஸ் ஆண்டர்சனை தங்களது அணியில் இணைத்துக் கொள்ள அணிகள் ஆர்வம் காட்டுகின்றன.

டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின்பும், ஜேம்ஸ் ஆண்டர்சன் முழு உடல் தகுதியுடன் இருப்பதாகவும், குறுகிய வடிவிலான போட்டிகளில் விளையாடும் விருப்பம் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

ஆலோசகராக தொடர்வேன்

குறுகிய வடிவிலான போட்டிகளில் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளபோதும், தொடர்ந்து இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு ஆலோசகராக செயல்படுவேன் என ஆண்டர்சன் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக அக்டோபரில் நடைபெறவுள்ள தொடரிலும், நியூசிலாந்துக்கு எதிராக டிசம்பரில் நடைபெறவுள்ள தொடரிலும் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு ஆலோசகராக தொடர்ந்து செயல்படுவேன் என்பதையும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா கைப்பற்றும்; பாகிஸ்தான் பயிற்சியாளர் நம்பிக்கை!

மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசனில் ஆஸ்திரேலிய அணியின் பாட் கம்மின்ஸ், ஸ்டீவ் ஸ்மித், கிளன் மேக்ஸ்வெல் மற்றும் டிராவிஸ் ஹெட் பங்கேற்று விளையாடினர். மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது சீசனில் மொத்த போட்டிகளின் எண்ணிக்கை 19-லிருந்து 34 ஆக அதிகரிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

மராட்டியத்தில் சோகம்: ஒரே குடும்பத்தின் 4 பேர் மர்ம மரணம்

டெல்லி முதல்-மந்திரியாக நாளை பதவியேற்கிறார் அதிஷி

பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் திரிணாமுல் காங்கிரசின் முக்கிய தலைவர்