10 ஆண்டுகளை நிறைவு செய்த கத்தி!

நடிகர் விஜய் நடித்த கத்தி திரைப்படம் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2014 அக்.22 ஆம் தேதி வெளியான திரைப்படம் கத்தி. விவசாயிகளின் தண்ணீர் மற்றும் வாழ்வாதரப் பிரச்னையைப் பேசும் படமாக உருவான இது மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன் ரூ. 100 கோடிக்கு அதிகமாக வசூலித்த பிளாக்பஸ்டர் திரைப்படமானது.

துப்பாக்கி படத்திற்குப் பின் முருகதாஸ் – விஜய் கூட்டணியில் உருவான படமென்பதால் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அது, வீணாகாத அளவிற்கு விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்று அந்த ஆண்டு வெளியானவற்றில் சிறந்த படமாகவும் கருதப்பட்டது.

இரட்டை கதாபாத்திரத்தில் விஜய் நடித்த இப்படத்தின் பாடல்களும் வைரலாகின. முக்கியமாக, அனிருத் இசையமைத்த படத்தின் பின்னணி இசை அன்று பெரிதாகப் பேசப்பட்டது.

இதையும் படிக்க: 6000 திரைகளில் கங்குவா!

கத்தி திரைப்படம் வெளியாகி இன்றுடன் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. படத்தில் இடம்பெற்ற சில காட்சிகளைப் பகிர்ந்து விஜய் ரசிகர்கள் இதனைக் கொண்டாடி வருகின்றனர்.

A proper commercial mass cinema with good social message, music, action blocks, performances.
Peak Vijay
Peak ARM
Peak Ani
10 Years of #Kaththipic.twitter.com/CgwYuU1Aa9

— AB George (@AbGeorge_) October 22, 2024

Related posts

பிளேயிங் லெவனில் இடம்பெற கே.எல்.ராகுல், சர்ஃபராஸ் இடையே போட்டி: இந்திய அணி பயிற்சியாளர்

அமெரிக்க அதிபர் தேர்தல்: தமிழ் உள்பட இந்திய மொழிகளில் வழிமுறைகள்

சென்னையில் ‘இளஞ்சிவப்பு ஆட்டோ திட்டம்’ – பெண்கள் விண்ணப்பிக்கலாம்!