10 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் மாற்றம்.. இரவில் வெளியான அறிவிப்பு

புதுச்சேரி, தெலுங்கானா உள்பட 12 இடங்களில் ஆளுநர்கள் மாற்றம் – மகாராஷ்ட்ரா ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன் நியமனம்!

சிபி ராதாகிருஷ்ணன்

10 மாநிலம் மற்றும் புதுச்சேரி உட்பட 2 யூனியன் பிரதேசங்களுக்கான புதிய ஆளுநர்கள் நியமித்து குடியரசு தலைவர் திரௌபாதி முர்மூ உத்தரவிட்டுள்ளார்.

10 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி உட்பட 2 யூனியன் பிரதேசங்களுக்கான ஆளுநர்கள் மாற்றப்பட்டதாக நேற்று இரவு அறிவிப்பு வெளியானது. அதன்படி, மகாராஷ்ட்ரா ஆளுநராக தமிழ்நாட்டை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.

அவர் ஏற்கெனவே ஜார்க்கண்ட் மாநில ஆளுநராகவும், தெலங்கானா மற்றும் புதுச்சேரியை ஆளுநராகவும் கூடுதலாக பொறுப்பு வகித்து வந்த நிலையில், தற்போது மகாராஷ்ட்ராவிற்கு மாற்றப்பட்டுள்ளார்.

விளம்பரம்

இந்நிலையில், புதுச்சேரி துணைநிலை ஆளுநராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி கே.கைலாசநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். குஜராத் முதலமைச்சர் அலுவலகத்தில் 18 ஆண்டுகள் பணியாற்றிய கைலாசநாதன், பிரதமர் மோடிக்கு மிகவும் நெருக்கமானவராகவும், நம்பிக்கைக்கு உரியவராகவும் கருதப்படுகிறார்.

இதையும் படிக்க:
2047ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற அனைத்து மாநிலங்களின் பங்கும் அவசியம் – பிரதமர் மோடி பேச்சு

ஓய்வு பெற்ற பிறகும், 11 ஆண்டுகள் குஜராத் முதலமைச்சர் அலுவலகத்தில் கைலாசநாதனுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. இதே போன்று தெலங்கானா ஆளுநராக, திரிபுராவின் முன்னாள் துணை முதலமைச்சர் ஜிஷ்ணு தேவ் வர்மா நியமிக்கப்பட்டுள்ளார். பஞ்சாப் மாநில ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித்தின் ராஜினாமாவை குடியரசு தலைவர் ஏற்றுக் கொண்டார்.

விளம்பரம்

இந்நிலையில், அசாம் மாநில ஆளுநராக இருந்த குலாப் சந்த் கட்டாரியா, பஞ்சாப் ஆளுநராகவும், சண்டிகரின் துணைநிலை ஆளுநராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். அசாம் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள லக்ஷ்மன் பிரசாத் ஆச்சாரியாவிற்கு மணிப்பூர் மாநிலம் கூடுதல் பொறுப்பாக ஒதுக்கப்பட்டுள்ளது.

பாகுபலி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் மறுத்த பிரபல தமிழ் நடிகர்… யார் தெரியுமா.?
மேலும் செய்திகள்…

இதே போன்று, ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக சந்தோஷ் குமார் கங்குவார், சத்தீஸ்கர் ஆளுநராக ராமன் தேகாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கர்நாடகாவை சேர்ந்த விஜயசங்கரை மேகாலயா ஆளுநராகவும், ஓம் பிரகாஷ் மாதூரை சிக்கிம் ஆளுநராகவும், ராஜஸ்தான் ஆளுராக ஹரிபாபுவையும் நியமித்து குடியரசு தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

விளம்பரம்

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
governor
,
President Droupadi Murmu

Related posts

மாநிலங்களுக்கான நிதிப்பகிர்வு நியாயமாக இருக்க வேண்டும்: பொதுக்குழு கூட்டத்தில் கமல்ஹாசன் பேச்சு

மாமியார் தலையில் கல்லை போட்டு கொன்ற மருமகள்… கரூரில் பயங்கரம்

சென்னை கடற்கரை – தாம்பரம் மின்சார ரெயில் சேவை நாளை ரத்து