1,000 டாஸ்மாக் கடைகளில் கூடுதல் கவுன்ட்டர்: ஏற்பாடுகள் நடந்து வருவதாக தகவல்

1,000 டாஸ்மாக் கடைகளில் கூடுதல் கவுன்ட்டர்: ஏற்பாடுகள் நடந்து வருவதாக தகவல்

சென்னை: தினசரி ரூ.2 லட்சத்துக்கு மேல் மது விற்பனை நடக்கும் ஆயிரம் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் கவுன்ட்டர்களை திறக்க டாஸ்மாக் நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது.

தமிழகத்தில் 4,829 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இங்கு 60 சதவீதம் அளவுக்கு குவாட்டர் மதுபாட்டில்கள் விற்பனையும், 25 சதவீதம் ஆஃப், 15 சதவீதம் அளவுக்கு ஃபுல் மதுபாட்டில்கள் விற்பனையும் நடந்து வருகிறது. கூட்டம் அதிகமாக வரும் பெரும்பாலான டாஸ்மாக் கடைகளில் 2 கவுன்ட்டர்கள் திறக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. ஆனாலும், இடப்பற்றாக்குறை, பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக, அனைத்து கடைகளிலும் இதை நடைமுறைபடுத்த முடியவில்லை.

இந்நிலையில், தற்போது தினசரிரூ.2 லட்சத்துக்கு மேல்மது விற்பனை நடக்கும் டாஸ்மாக் கடைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட கவுண்டர்கள் திறக்க டாஸ்மாக் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் தினசரிரூ.2 லட்சத்துக்கு மேல் மதுவிற்பனை நடைபெறும் 1,000டாஸ்மாக் கடைகளின் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்தக் கடைகளில் இன்னும் ஒரு வார காலத்துக்குள் கூடுதல் கவுன்ட்டர்களை திறக்க அந்தந்த மாவட்டடாஸ்மாக் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பட்டுள்ளது.

குறிப்பாக, ஒரு டாஸ்மாக்கடைகளில் ஒரு மேற்பார்வையாளர், 2 விற்பனையாளர்கள் பணியாற்றுவார்கள். தற்போது கூடுதலாக கவுன்ட்டர்கள் திறக்கப்படும்பட்சத்தில், 2 மேற்பார்வையாளர்கள், 4 விற்பனையாளர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும், தீபாவளி பண்டிகை நெருங்குவதால், டாஸ்மாக் கடைகளில் கூடுதல் மது பாட்டில்கள் இருப்பு வைக்கவும், அதிளவில் மதுவிற்பனை செய்யவும் டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related posts

“சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் சமூக வலைதள வதந்திகள் பெரும் சவால்” – முதல்வர் ஸ்டாலின்

ஜப்பான் ஆளுங்கட்சி தலைமை அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு