11 ஆண்டுகளுக்குப் பிறகு கொலைக் குற்றவாளி ஜார்க்கண்ட் வனப்பகுதியில் இருந்து கைது

11 ஆண்டுகளுக்குப் பிறகு கொலைக் குற்றவாளி ஒருவர் ஜார்க்கண்ட் வனப்பகுதியில் இருந்து கைது செய்யப்பட்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தில்லி திலக் நகரில் கடந்த 2013-ம் ஆண்டு ஜிதேந்தர் லம்பா என்பவர் சொத்து தகராறில் அவரது உடன் பிறந்த சகோதரர் ராஜேஷ் சிங் லம்பாவால் கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் 6 பேருக்கு தொடர்பிருந்த நிலையில் ஏற்கெனவே 5 பேர் கைது செய்யப்பட்டுவிட்டனர். ஆனால் அதில் தொடர்புடைய பனாரசி தப்பி ஓடிவிட்டார்.

அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்த நீதிமன்றம், அவரை கைது செய்பவருக்கு ரூ. 50,000 ரொக்கப்பரிசு வழங்குவதாகவும் அறிவித்தது. கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த காவல்துறையினர், இறுதியாக பனாரசியின் தொலைதூர உறவினரின் மொபைல் எண் ஜார்க்கண்டில் செயலில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

குஜராத்: தனியார் நிறுவனத்தின் சுவர் இடிந்து விழுந்ததில் 6 பேர் பலி

இந்த எண்ணின் இருப்பிடம் சத்தீஸ்கர் மற்றும் ஜார்க்கண்ட் எல்லையில் உள்ள வனப் பகுதிகளில் தொடர்ந்து காண்பிக்கப்பட்டது. உடனே இருப்பிடப் பகுதியை அடைந்த காவல்துறையினர் உள்ளூர் தொழிலாளர்களுடன் இணைந்து வனப்பகுதிக்குள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்களின் தேடுதல் முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்தது. வனப்பகுதியில் டிரக்கை ஓட்டி வந்த பனாரசியை அவர்கள் கைது செய்தனர். திருமணமாகாத பனாரசி, உறவினர் உதவியுடன் காட்டுப் பகுதியில் தங்கியிருந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

Related posts

இரிடியம் தருவதாக ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.2 கோடி மோசடி: 4 போ் கைது

முழு கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரி!

சர்ஃபராஸ் கான் சதம்..! மழையினால் பெங்களூரு டெஸ்ட் போட்டி பாதிப்பு!