11,000 வைரக்கற்களில் ரத்தன் டாடா உருவம்!

சூரத்தைச் சேர்ந்த நகைக் கடை உரிமையாளர் ஒருவர், மறைந்த இந்தியத் தொழிலதிபர் ரத்தன் டாடாவின் உருவப் படத்தை 11 ஆயிரம் வைரக் கற்கள் கொண்டு உருவாக்கியுள்ளார்.

குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளரின், ரத்தன் டாடாவை பெருமைப்படுத்தும் இந்த முயற்சி சமூக வலைதளத்தில் பலரால் பாராட்டப்பட்டு வருகிறது.

வைரத்தில் ரத்தன் டாடா உருவம்

இந்தியத் தொழிலதிபர் ரத்தன் டாடா கடந்த செப். 9ஆம் தேதி காலமானார். வயது மூப்பு தொடர்பான பிரச்னைகளுக்காக மும்பையில் உள்ள பிரேச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இரவு 11.30 மணியளவில் உயிரிழந்தார்.

இதையும் படிக்க | பாபா சித்திக் கொலை: லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலின் சதித்திட்டம்!

ரத்தன் டாடாவின் மறைவுக்கு தொழிலதிபகள், அரசியல் தலைவர்கள், நடிகை நடிகர்கள் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்தனர். பின்னர் அவரின் உடல் வோா்லியில் உள்ள மின் தகன மேடையில் தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில், ரத்தன் டாடாவுக்கு மரியாதை செலுத்தும் வகையில், சூரத்தைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் ஒருவர் 11 ஆயிரம் வைரக் கற்களைக் கொண்டு ரத்தன் டாடாவின் உருவப்படத்தை வடிவமைத்துள்ளார்.

இதுவரை இன்ஸ்டாகிராமில் 6 லட்சம் மக்கள் லைக் செய்துள்ளனர். பல வைரங்கள் சேர்ந்தாலும், அந்த ஒரு வைரத்திற்கு (ரத்தன் டாடா) ஈடாகாது என்றும், ஒரு வைரத்தை உருவாக்க ஆயிரக்கணக்கான வைரக் கற்கள் ஒன்று சேர்ந்துள்ளதாகவும் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

Related posts

அஜித் சொன்ன அறிவுரை – ‘அமரன்’ இசை வெளியீட்டு விழாவில் பகிர்ந்த சிவகார்த்திகேயன்

மது வணிகத்தை அதிகரிப்பது மட்டும் தான் திராவிட மாடல் அரசின் ஒற்றை மந்திரமா? – அன்புமணி ராமதாஸ்

பெங்களூரு டெஸ்ட்: மழையால் ஆட்டம் பாதிப்பு