12 இடங்களில் வெயில் சதம்: இன்று 4 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும்

சென்னை: தமிழகத்தில் திங்கள்கிழமை சென்னை உள்பட மொத்தம் 12 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட் கடந்து பதிவானது. செவ்வாய்க்கிழமை, இயல்பை விட வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் திங்கள்கிழமை அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 104.54 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. மேலும், மதுரை நகரம் } 103.64, நாகை} 102.38, தஞ்சாவூர், ஈரோடு}தலா 102.2, சென்னை மீனம்பாக்கம் } 101.12, பரமத்தி வேலூர்} 100.76, பாளையங்கோட்டை, பரங்கிப்பேட்டை} தலா 100.4, கடலூர், அதிராம்பட்டினம், திருச்சி } தலா 100.04 டிகிரி என மொத்தம் 12 இடங்களில் 100 டிகிரியைக் கடந்துள்ளது. மேலும், தமிழகத்தில் ஒருசில இடங்களில் செவ்வாய்க்கிழமை அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும். புதுச்சேரியில் 100.76 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

மழைக்கு வாய்ப்பு: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, செப்.17 முதல் செப்.22 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் செப்.17,18}ஆகிய தேதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் அதிகபட்ச வெப்பநிலை 100.4 டிகிரி வரை இருக்கும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனையொட்டிய குமரிக்கடலில், செப்.17 முதல் 20}ஆம் தேதி வரை, மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மராட்டியத்தில் சோகம்: ஒரே குடும்பத்தின் 4 பேர் மர்ம மரணம்

டெல்லி முதல்-மந்திரியாக நாளை பதவியேற்கிறார் அதிஷி

பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் திரிணாமுல் காங்கிரசின் முக்கிய தலைவர்