124 பேருடன் மதுரைக்கு புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு – மீண்டும் சென்னையில் தரையிறக்கம்

124 பேருடன் மதுரைக்கு புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு – மீண்டும் சென்னையில் தரையிறக்கம்

சென்னை: சென்னையில் இருந்து 124 பேருடன் மதுரைக்கு புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், விமானம் மீண்டும் சென்னையில் தரையிறங்கியது.

சென்னையில் இருந்து மதுரை ஏர் இந்தியா ஏர்லைன்ஸ் விமானம் 117 பயணிகள், 7 ஊழியர்கள் என மொத்தம் 124 பேருடன் இன்று புறப்பட்டது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, விமானத்தில் மிகப்பெரிய அளவில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதற்கான அபாய எச்சரிக்கை சிக்னல் வந்ததை கவனித்த தலைமை விமானி, உடனே சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து, சென்னை விமான நிலையத்தில், விமானம் அவசரமாக தரையிறங்குவதற்கான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. விமானம் திரும்பி சென்னையில் வந்து தரையிறங்கியது. விமானத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். ஓய்வு அறைகளில் தங்க வைக்கப்பட்ட பயணிகள், மாற்று விமானம் மூலம் மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால், சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Related posts

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

தமிழகத்தில் மகப்பேறு, குழந்தை இறப்பை பூஜ்ஜியத்துக்கு கொண்டுவர 4 புதிய திட்டங்கள்

தையல், ஓவியம் உள்ளிட்ட சிறப்பு ஆசிரியர் தேர்வு: 7 ஆண்டாக கிடப்பில் போடப்பட்ட தமிழ்வழி ஒதுக்கீடு தேர்வு பட்டியல்