1,338 நாள்களுக்குப் பின் சொந்த மண்ணில் பாக். வெற்றி! 20 விக்கெட்டுகளை கைப்பற்றிய 2 வீரர்கள்!

இங்கிலாந்துக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் 152 ரன்கள் வித்தியாசத்தில் வென்று அசத்தியது.

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி முல்தானில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் 366 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இங்கிலாந்து 291 ஆல் அவுட்டானது. 2ஆவது இன்னிங்ஸில் பாகிஸ்தான் 221 ரன்கள் எடுத்தது. 2ஆவது இன்னிங்ஸில் 144க்கு இங்கிலாந்து ஆட்டமிழந்தது.

இதன்மூலம் பாகிஸ்தான் அணி 152 ரன்கள் வித்தியாசத்தில் வென்று அசத்தியது.

இதையும் படிக்க: கோப்பையை வென்றார் அர்ஜுன் எரிகைசி..! தவறவிட்ட உலக சாதனை!

1,338 நாள்களுக்குப் பின் சொந்த மண்ணில் பாகிஸ்தான் வெற்றி பெற்றுள்ளது. அதிலும் குறிப்பாக 2 சுழல்பந்து வீச்சாளர்கள் நோமன் அலி (11) சஜித் கான் (9) மட்டுமே 20 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்கள்.

1987க்குப் பிறகு 2 பாகிஸ்தான் சுழல்பந்துவீச்சாளர்கள் ஒரே போட்டியில் 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார்கள். பாகிஸ்தானுக்கு இது 7ஆவது முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

சஜித் கான்.

சஜித் கான் ஆட்ட நாயகன் விருது பெற்றார். 3 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது.

Related posts

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: ஆளுநருக்கு எந்தத் தொடர்பும் இல்லை

டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி புதிய சாதனை!

பாபா சித்திக் கொலை வழக்கு: மேலும் 5 பேர் கைது