15 மாதங்களுக்குப் பின் சுறுசுறுப்பான செந்தில் பாலாஜியின் இன்ஸ்டா கணக்கு!

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு ஜாமீன் வெளியே வந்துள்ள மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் இன்ஸ்டாகிராம் கணக்கு மீண்டும் சுறுசுறுப்பாக இயங்க தொடங்கியுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது

2011 முதல் 2015 வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தார். அப்போது, அரசுப் போக்குவரத்து நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்று மோசடி செய்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் தொடரப்பட்ட பிஎம்எல்ஏ வழக்கில் அமலாக்கத் துறையினர் கடந்த ஆண்டு ஜூன் 14-ஆம் தேதி செந்தில் பாலாஜியை கைது செய்ததனர்.

இதனையடுத்து, ஓர் ஆண்டுக்கும் மேலாக சிறையிலிருந்த செந்தில் பாலாஜிக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடா்ந்து, புழல் சிறையிலிருந்து செப். 26-ல் வெளியே வந்தார்.

சுறுசுறுப்பான இன்ஸ்டா கணக்கு

கோவை நிகழ்ச்சியொன்றில் செந்தியாளர்களுடன் பேசியதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்தாண்டு ஜூன் 12-ஆம் தேதி பகிர்ந்து இருந்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி. இதையடுத்து அவர் சிறை சென்ற நிலையில், 15 மாதங்களாக இன்ஸ்டாகிராம் கணக்கு செயல்படாமல் இருந்தது.

இந்த நிலையில், தில்லி சென்று திரும்பிய தமிழக முதல்வர் ஸ்டாலினை, சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி வரவேற்று, அதன் தொடர்பான புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இன்ஸ்டாகிராம் கணக்கை புதுப்பித்தார்.

பதவியேற்பு விழாவில்…

‘ தற்போதைய சூழலில்தான் காந்தியின் தேவை மிகுதியாக உள்ளது’ – மு.க. ஸ்டாலின்

காமராஜருக்கு அஞ்சலி

தொடர்ந்து, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்தது, மீண்டும் அமைச்சராக பதவியேற்றபோது ஸ்டாலின் வாழ்த்தியது என புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி. இதன் மூலம் செந்தில் பாலாஜியின் இன்ஸ்டாகிராம் கணக்கு தற்போது சுறுசுறுப்பாக இயக்க தொடங்கியுள்ளது.

View this post on Instagram

A post shared by V.Senthilbalaji (@v.senthilbalaji)

செந்தில் பாலாஜி இன்று(அக். 2) மகாத்மா காந்தி பிறந்த நாளுக்கு வாழ்த்துகளை தெரிவித்தும், காமராஜர் நினைவு நாளுக்கு அஞ்சலியும் செலுத்தியும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Related posts

ரஷியா சென்றடைந்தார் மோடி!

யூடியூபர் இர்ஃபானுக்கு மன்னிப்பு கிடையாது: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!