15 லட்சம் கார்களை திரும்பப் பெறும் பி.எம்.டபிள்யூ. நிறுவனம்!

கார் பிரேக்குகளில் உள்ள கோளாறு காரணமாக சுமார் 15 லட்சம் கார்களை திரும்பப் பெறப்போவதாக ஜெர்மானிய கார் நிறுவனமான பி.எம்.டபிள்யூ. அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனால், பி.எம்.டபிள்யூ. கார்கள் விற்பனை அதிகளவில் பாதிப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார் பிரேக் கோளாறால் பாதிக்கப்பட்ட வாகனங்கள் ஜூன் 2022 மற்றும் ஆகஸ்ட் 2024 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் தயாரிக்கப்பட்டுள்ளன.

ஓணம், தீபாவளி! 8 சிறப்பு ரயில்களை அறிவித்தது தெற்கு ரயில்வே!

பி.எம்.டபிள்யூ. எக்ஸ் (BMW X) மாடல்களான (X3 மற்றும் X4), X5 மற்றும் X7 சீரிஸ், ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர், மினிகூப்பர் மற்றும் கண்ட்ரிமேன் ஆகிய கார்களும் இந்தப் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

பாதிக்கப்பட்ட 15.3 லட்சம் கார்களில், 12 லட்சம் கார்கள் வாடிக்கையாளரிடம் உள்ளன. சுமார் 3,20,000 கார்கள் டீலர் ஸ்டாக்கில் உள்ளன.

சீனாவில் சுமார் 3,70,000, அமெரிக்காவில் 2,70,000, ஜெர்மனியில் 1,50,000, கொரியாவில் 70,000 மற்றும் பிரான்சில் 60,000 உள்பட 15 லட்சம் கார்கள் திரும்பப் பெற முடிவு செய்துள்ளது. பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் இந்த வருடத்தின் இரண்டாம் பாதியில் அதன் உற்பத்தி அதிகளவில் பாதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பாம்பன் பாலத்தை அக்.2ல் திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி?

பி.எம்.டபிள்யூ.வின் இந்தத் திரும்பப் பெறும் முடிவால் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் பி.எம்.டபிள்யூ.வின் பங்குகள் 11%-க்கும் அதிகமாக சரிந்தன.

இதுபற்றி பி.எம்.டபிள்யூ. செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “பிரேக் கோளாறு ஏற்படுவதற்கு முன்பே கண்டறியும் மென்பொருளை பி.எம்.டபிள்யூ. நிறுவனம் உருவாக்கியுள்ளது. பிரேக் கோளாறு கண்டறியப்பட்டால், அது சிஸ்டம் ரீப்ளேஸ்மென்ட்டை இலவசமாகப் பெறுவதற்கு விரைவில் டீலர்ஷிப்பைப் பார்க்குமாறு ஓட்டுநரை எச்சரிக்க வேண்டும். ஆனால், இது சாத்தியமில்லாதது தான்” என்று தெரிவித்துள்ளார்.

டி20 தொடரில் பந்து வீசுவேனா? கேப்டனும் ஆல்ரவுண்டருமான மிட்செல் மார்ஷ் பதில்!

Related posts

2025-இல் இந்தியாவில் க்வாட் மாநாடு: பிரதமர் மோடி

திருப்பதி லட்டு விவகாரம்: ஜெகன்மோகன் ரெட்டி வீட்டை முற்றுகையிட்ட பாஜகவினர் கைது

திருப்பதி லட்டு விவகாரம்.. சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்