1600 மெகாவாட் அனல் மின் திட்டத்தை அமைக்கும் பெல்!

1600 மெகாவாட் அனல் மின் திட்டத்தை அமைக்கும் பெல்!ஜார்க்கண்டில் 1600 மெகாவாட் அனல் மின் நிலையம் அமைக்க ரூ.13,300 கோடி ஆர்டர் பெல் பெற்றதுBHEL

ஜார்க்கண்ட் மாநிலம் கோடெர்மாவில் 1600 மெகாவாட் அனல் மின் நிலையம் அமைக்க தாமோதர் வேலி கார்ப்பரேஷன் இடமிருந்து ரூ.13,300 கோடி ஆர்டரை பொதுத்துறை நிறுவனமான பெல் பெற்றுள்ளது.

நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதற்கான மத்திய அரசின் குறிக்கோளுக்கு ஏற்ப, ஜார்க்கண்டில் உள்ள கோடெர்மாவில் 2×800 மெகாவாட் திறன் படைத்த அனல் மின் நிலையம் அமைக்கவும், கொள்முதல் மற்றும் கட்டுமான தொகுப்புக்கான டெண்டரை தாமோதர் வேலி கார்ப்பரேஷன் ஜூன் 26, 2024 அன்று பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் உடன் இறுதி செய்துள்ளது என்று மின்சார அமைச்சகம் தனது அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.

இந்த முதலீட்டின் மூலம், உள்ளூர் பொருளாதாரத்தில் கணிசமான தாக்கம் ஏற்படும் வேளையில் மக்களும் பயன்பெறுவர். அதே நேரத்தில் தாமோதர் வேலி கார்ப்பரேஷன் நிறுவனத்தால் நிறுவப்பட்டும் அனல் மின் உற்பத்தி நிலையமானது 2030 க்குள் 8140 மெகாவாட்ட வரை மின் தயாரிக்கும் திறன் படைத்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்