2ஆவது முறையாக விம்பிள்டன் கோப்பையை வென்றார் அல்கராஸ்!

2ஆவது முறையாக விம்பிள்டன் கோப்பையை வென்றார் அல்கராஸ்! விம்பிள்டன் இறுதிப் போட்டியில் கார்லோஸ் அல்கராஸ் ஜோகோவிச்சை வீழ்த்தி 2ஆவது முறையாக கோப்பையை வென்றார் .விம்பிள்டன் கோப்பையை வென்ற அல்கராஸ்Kirsty Wigglesworth

விம்பிள்டன் இறுதிப் போட்டியில் கார்லோஸ் அல்கராஸ் ஜோகோவிச்சை வீழ்த்தி 2ஆவது முறையாக கோப்பையை வென்றார் .

நிகழாண்டு சீசனின் மூன்றாவது கிராண்ட்ஸ்லாம் பந்தயமான விம்பிள்டன் லண்டனில் நடைபெற்றது. இதில் அனுபவம் வாய்ந்த 37 வயதான ஜோகோவிச், நடப்பு சாம்பியனும் 21 வயதான இளம் வீரர் அல்கராஸுடன் மோதினார்.

விம்பிள்டன் இறுதிப் போட்டியில் 6-2. 6-2, 7-6 (7-4) என்ற செட்களில் ஜோகோவிச்சை வீழ்த்தினார் அல்கராஸ்.

கடந்தாண்டு விம்பிள்டனிலும் அல்கராஸ் ஜோகோவிச்சை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. இது அவருக்கு 4ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டம். பிரெஞ்சு ஓபன்-விம்பிள்டன் என தொடா் இரட்டைப் பட்டம் வென்ற 6-ஆவது வீரா் என்ற சிறப்பையும் பெற்றுள்ளார் அல்கராஸ்.

விளையாடிய 4 கிராண்ட்ஸ்லாம் இறுதிப்போட்டியிலும் பட்டம் வென்று அசத்தியுள்ளார் அல்கராஸ்.

Related posts

மும்பை: பாலியல் பலாத்கார குற்றவாளி போலீசாருடனான துப்பாக்கி சூட்டில் பலி

பலாத்காரத்திற்கு ஆளான மகளை 2 மகன்களுடன் சேர்ந்து பெற்ற தாயே தீர்த்து கட்டிய கொடூரம்

ஜம்மு காஷ்மீர் தேர்தல் – வாக்குறுதிகளை அறிவித்த ராகுல் காந்தி