2வது டி20 : ஜேக் பிரேசர் அரைசதம் : ஆஸ்திரேலியா 193 ரன்கள் குவிப்பு

194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து விளையாடி வருகிறது .

கார்டிப்,

ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது.இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி இன்றுநடைபெற்று வருகிறது டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.அதன்படி, முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி அதிரடியாக விளையாடியது.

தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் 14 பந்தில் 31 ரன்கள் எடுத்து அவுட்டானார்.முதல் விக்கெட்டுக்கு மேத்யூ ஷாட்-ஹெட் ஜோடி 52 ரன்களை சேர்த்தது. ஷாட் 28 ரன்னில் ஆட்டமிழந்தார்.அடுத்து ஜேக் பிரேசர் அதிரடியாக ஆடி அரை சதமடித்து வெளியேறினார். பொறுப்புடன் ஆடிய ஜோஷ் இங்கிலிஸ் 42 ரன்னில் ஆட்டமிழந்தார்.இறுதியில், ஆஸ்திரேலியா அணி 20 ஓவரில் 193 ரன்கள் குவித்தது.இங்கிலாந்து சார்பில் லிவிங்ஸ்டோன், பிரிடோன் கார்ஸ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.இதையடுத்து, 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து விளையாடி வருகிறது .

Related posts

டெஸ்ட் கிரிக்கெட்: மாபெரும் சாதனை பட்டியலில் 5-வது வீரராக இணைந்த அஸ்வின்

வங்காளதேசத்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட்: சதம் அடித்த பின் அஸ்வின் கூறியது என்ன..?

டெஸ்ட் கிரிக்கெட்: சச்சின் – ஜாகீர்கான் சாதனையை தகர்த்த அஸ்வின் – ஜடேஜா