2வது டெஸ்ட்; வெஸ்ட் இண்டீசுக்கு 263 ரன்களை இலக்காக நிர்ணயித்த தென் ஆப்பிரிக்கா

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜெய்டன் சீல்ஸ் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

கயானா,

தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் போட்டி டிரா ஆனது. இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி கயானாவில் நடைபெற்று வருகிறது.

கடந்த 15ம் தேதி (இந்திய நேரப்படி) தொடங்கிய இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 160 ரன்களும், வெஸ்ட் இண்டீஸ் 144 ரன்களும் எடுத்தன. இதையடுத்து 16 ரன் முன்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா நேற்றைய 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 223 ரன்கள் குவித்திருந்தது.

கைல் வெர்ரின்னே 50 ரன்களுடனும், வியான் முல்டர் 34 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜெய்டன் சீல்ஸ் 3 விக்கெட்டுகளும், குடகேஷ் மோட்டி 2 விக்கெட்டுகளும் வீழ்த்தி இருந்தனர்.

இந்நிலையில் 3வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் தொடர்ந்து பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா 2வது இன்னிங்சில் 246 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக வெர்ரின்னே 59 ரன்கள் எடுத்தார்.

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜெய்டன் சீல்ஸ் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் பெற்ற 16 ரன்கள் முன்னிலையுடன் 262 ரன்கள் குவித்தது. இதையடுத்து 263 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் தனது 2வது இன்னிங்சை ஆடி வருகிறது.

Related posts

டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய மண்ணில் வரலாறு படைத்த நியூசிலாந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; கேரளாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற பெங்களூரு

சாண்ட்னெர் சுழலில் சிக்கிய இந்தியா… முதல் இன்னிங்சில் 156 ரன்களில் ஆல் அவுட்