2-ஆம் உலகப்போர் விமானம் தீப்பிடித்து 2 விமானிகள் பலி!

தெற்கு பின்லாந்தில் 2-ஆம் உலகப் போர் விமானம் தீப்பிடித்து 2 விமானிகள் பரிதாபமாக பலியாகினர்.

தெற்கு பின்லாந்தில் ஜெர்மனி விமானிகள் 2 பேர் சென்ற இரண்டாம் உலகப்போர் விமானம் மேலெழும் போது தீப்பிடித்ததில் கீழே விழுந்து இருவரும் உயிரிழந்ததாக காவல் துறையினர் வியாழக்கிழமை தெரிவித்துள்ளனர்.

ஒரு என்ஜின் இரண்டு இருக்கைகள் கொண்ட டி6 டெக்ஸான் விமானம் 1930 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு பிரபலமான அமெரிக்க ராணுவ பயிற்சி விமானம். தற்போது விமான கண்காட்சிகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ரேஸ்கலா விமான நிலையத்திற்கு அருகிலுள்ள காட்டில் தீப்பிடித்ததில் கீழே விழுந்ததில் விமானிகள் இருவரும் கொல்லப்பட்டனர். மேலும், பலியான இருவரும் அனுபவம் வாய்ந்த விமானிகள் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

சிறிய ரக விமானம் வானத்தில் மேலெழும்பி தீப்பிடித்துள்ளது. விமானத்தின் என்ஜினில் எதாவது கோளாறு ஏற்பட்டதால் தீப்பிடித்திருக்கலாம் என்று பின்லாந்து குற்றவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜெர்மனிக்கு சொந்தமான இந்த விமானம் சமீபத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஜெர்மனிக்கு மாற்றப்படுவதற்கு முன்பு சோதனை ஓட்டம் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த விமானம் 1942-ல் தயாரிக்கப்பட்டது. பின்லாந்தில் உள்ள ஒரே ஒரு விமானமாகும். டி6-ன் கடற்படை பதிப்பான இந்த விமானம் 2020 இல் பின்லாந்திற்கு கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related posts

தூத்துக்குடி: கடல் அலையில் சிக்கி 2 பெண்கள் பலி!

கிருஷ்ணகிரி அருகே தீ விபத்து: தீயணைப்புத் துறை அலுவலர், அவரது தந்தை பலத்த காயம்

அடுத்த 3 மணி நேரத்துக்கு 7 மாவட்டங்களில் மழை!