போலந்து நாட்டுக்கு புறப்பட்டார் பிரதமர் மோடி : 23-ம் தேதி உக்ரைனுக்கு செல்கிறார்!
பிரதமர் நரேந்திர மோடி
2 நாட்கள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி போலந்து புறப்பட்டார்.
மொரார்ஜி தேசாய்க்கு பிறகு, கடந்த 45 ஆண்டுகளில் போலந்து செல்லும் பிரதமர் என்ற பெருமையை பெறுகிறார் நரேந்திரமோடி.
போலந்து செல்லும் பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் ஆண்டிரசெஜ் டூடா, பிரதமர் டொனால்டு டஸ்க் ஆகியோரை சந்திக்கிறார்.
அங்கு இருநாட்டு நல்லுறவை மேம்படுத்துவது குறித்து அந்நாட்டின் தலைவர்களுடன் பிரதமர் மோடி பேச உள்ளார்.
பின்னர் வார்சாவில் உள்ள இந்திய வம்சாவளியினர்,மற்றும் தொழில் அதிபர்களை பிரதமர் சந்திக்க உள்ளார். போலந்து சுற்றுப்பயணம் முடித்த பிறகு அங்கிருந்து, வரும் 23 ஆம் தேதி ரயில் மூலம் பிரதமர் மோடி, உக்ரைன் செல்கிறார்.
விளம்பரம்இதையும் படிங்க: தொழில் தொடங்க பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு – முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்கத் தொடங்கிய பிறகு பிரதமர் மோடி முதல் முறையாக உக்ரைன் செல்கிறார். உக்ரைன் அதிபர் செலன்ஸ்கியின் அழைப்பை ஏற்று உக்ரைன் நாட்டுக்கு பிரதமர் மோடி செல்கிறார்.
- Telegram
- Follow us onFollow us on google news
.Tags:
PM Modi
,
PM Narendra Modi