2 நாள்களுக்கு இயல்பை விட வெயில் அதிகரிக்கும்..!

தமிழகத்தில் 2 நாள்களுக்கு 4 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த நான்கு நாள்களாக வெயில் கொளுத்திவந்த நிலையில், நேற்றிரவு சென்னை மற்றும் அதன் புறநகர்ப்பகுதிகளில் விடிய விடிய மிதமானது முதல் கனமழை பெய்தது. இதனால் பூமி குளிர்ந்துள்ளது. இதனால் மகிழ்ச்சி அடந்தனர். இதைத்தொடர்ந்து இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடனும், லேசான வெயிலும் நிலவி வருகின்றது.

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்..

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (செப். 19, 20 தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஹரியாணா தேர்தல் பிரசாரத்தில் கேஜரிவால்: சூடுபிடிக்கும் களம்!

தமிழகத்தில் அடுத்த 2 நாள்களுக்கு (செப்.19, செப்.20) அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2 டிகிரி முதல் 4 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும்பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.

சென்னையை பொருத்தவரை..

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

30 வயதுக்கு மேல் உள்ள பெண்களின் கவனத்திற்கு!

மீனவர்கள்..

இன்று மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் இந்த நாளில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Related posts

மருத்துவர்கள் போராட்டம்: காவல் துறை அழுத்தத்தால் கூடாரம், மின்விசிறி அகற்றம்!

சதம் விளாசிய ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியது என்ன?

பென் டக்கெட், வில் ஜாக்ஸ் அசத்தல்: ஆஸ்திரேலியாவுக்கு 316 ரன்கள் இலக்கு!