2-வது ஒருநாள்: இருவர் அரைசதம்; இங்கிலாந்துக்கு 271 ரன்கள் இலக்கு!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 270 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி லீட்ஸில் இன்று (செப்டம்பர் 21) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, ஆஸ்திரேலிய அணி முதலில் விளையாடியது.

ஆஸ்திரேலிய அணியில் மேத்யூ ஷார்ட் மற்றும் டிராவிஸ் ஹெட் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இருவரும் தலா 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அதன் பின், களமிறங்கியவர்களில் ஸ்டீவ் ஸ்மித் 4 ரன்களிலும், மார்னஷ் லபுஷேன் 19 ரன்களிலும் ஆட்டமிழக்க, கேப்டன் மிட்செல் மார்ஷ் மற்றும் அலெக்ஸ் கேரி ஜோடி சேர்ந்தனர்.

சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக விளையாடுவது குறித்து மனம் திறந்த ஷுப்மன் கில்!

இந்த இணை சிறப்பாக விளையாடி ஆஸ்திரேலிய அணிக்கு ரன்களை சேர்த்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். மிட்செல் மார்ஷ் 59 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும்.

அதன் பின் களமிறங்கியவர்களில் ஆரோன் ஹார்டியை தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆரோன் ஹார்டி 23 ரன்கள் எடுத்தார். களமிறங்கியது முதலே சிறப்பாக விளையாடிய அலெக்ஸ் கேரி 67 பந்துகளில் 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 8 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும்.

இறுதியில் ஆஸ்திரேலிய அணி 44.4 ஓவர்களில் 270 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இங்கிலாந்து தரப்பில் பிரைடான் கார்ஸ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மேத்யூ பாட்ஸ், அடில் ரஷீத் மற்றும் ஜேக்கோப் பெத்தெல் தலா 2 விக்கெட்டுகளையும், ஆலி ஸ்டோன் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

எம்.எஸ்.தோனியின் சாதனையை சமன் செய்த ரிஷப் பந்த்!

271 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது.

Related posts

வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு

மகனை கிணற்றில் வீசி கொன்று தாய் தற்கொலை… குடும்பத் தகராறில் விபரீதம்

மோடி ஆட்சிதான் காமராஜர் ஆட்சி – தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி