2-வது டெஸ்ட்: காவெம் ஹாட்ஜ் சதம்; 457 ரன்களுக்கு மே.இ.தீவுகள் ஆட்டமிழப்பு!

2-வது டெஸ்ட்: காவெம் ஹாட்ஜ் சதம்; 457 ரன்களுக்கு மே.இ.தீவுகள் ஆட்டமிழப்பு!இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் 457 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.படம் | AP

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் 457 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நேற்று முன் தினம் (ஜூலை 18) நாட்டிங்ஹமில் தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் விளையாடிய இங்கிலாந்து அணி 416 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஆலி போப் 121 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, பென் டக்கெட் 71 ரன்களும், பென் ஸ்டோக்ஸ் 69 ரன்களும் எடுத்தனர்.

மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் அல்சாரி ஜோசப் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஜேடன் சீல்ஸ், கெவின் சின்க்ளேர் மற்றும் காவெம் ஹாட்ஜ் தலா 2 விக்கெட்டுகளையும், ஷமர் ஜோசப் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

இதனையடுத்து, தனது முதல் இன்னிங்ஸில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் 457 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய காவெம் ஹாட்ஜ் சதமடித்து அசத்தினார். அவர் 120 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 19 பவுண்டரிகள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, அலிக் அதனாஸ் மற்றும் ஜோஷ்வா டி சில்வா தலா 82 ரன்கள் எடுத்து அசத்தினர்.

இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். கஸ் அட்கின்சன் மற்றும் சோயப் பஷீர் தலா 2 விக்கெட்டுகளையும், மார்க் வுட் மற்றும் பென் ஸ்டோக்ஸ் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

457 ரன்கள் எடுத்ததன் மூலம் மேற்கிந்தியத் தீவுகள் அணி இங்கிலாந்தைக் காட்டிலும் 41 ரன்கள் முன்னிலை பெற்றது. இங்கிலாந்து அணி தற்போது அதன் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

Related posts

போக்குவரத்து இணையதளம், செயலி மேம்பாடு: அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்

தமிழகத்தில் 29-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு

செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்ற இந்திய அணிக்கு ஆளுநர், முதல்வர் வாழ்த்து