2024 – 25ம் ஆண்டுக்கானமத்திய பட்ஜெட் தாக்கல் செய்யும் தேதி அறிவிப்பு

2024 – 25ம் ஆண்டுக்கானமத்திய பட்ஜெட் தாக்கல் செய்யும் தேதி அறிவிப்பு

அமைச்சர் நிர்மலா சீதாராமன்

நடப்பு நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை வரும் 23-ஆம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார்.

மக்களவைத் தேர்தல் காரணமாக, நடப்பு நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த பிப்ரவரி ஒன்றாம் தேதி தாக்கல் செய்தார்.

இதன்பின்னர் மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றிபெற்று, 3-ஆவது முறையாக ஆட்சியமைத்துள்ளது.
புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு மற்றும் சபாநாயகர் தேர்தலுக்காக அண்மையில் நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடைபெற்றது.

இந்நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர், வரும் 22-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

நாடாளுமன்ற அலுவல்களைப் பொருத்து, அடுத்த மாதம் 12-ஆம் தேதிவரை கூட்டத் தொடர் நடைபெறும் என்றும், மக்களவையில் மத்திய அரசின் பட்ஜெட்டை வரும் 23-ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வார் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க:
ஆம்ஸ்ட்ராங்கை கொன்றவர்களில் ஒருவர் பாஜக பிரமுகர் – போலீசார் புதிய தகவல்

இடைக்கால பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் இடம்பெறாத நிலையில், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், வரும் 23-ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் முழுமையான பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விளம்பரம்

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Finance minister
,
Nirmala sitaraman

Related posts

உல்லாசம் அனுபவிக்க பெண்களை அனுப்புவதாக கூறி பணமோசடி – கடலூரை சேர்ந்த பெண் கைது

கேரளாவில் மேலும் 2 பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து