2026 காமன்வெல்த் போட்டிகள்: ஹாக்கி,கிரிக்கெட், துப்பாக்கி சுடுதல் நீக்கம்! இந்தியாவுக்கு கடும் பாதிப்பு!

இங்கிலாந்தின் கிளாஸ்கோவில் வரும் 2026-இல் நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டிகளில் ஹாக்கி, கிரிக்கெட் நீக்கம், துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம், ஸ்குவாஷ், பாட்மின்டன் உள்ளிட்ட முக்கிய விளையாட்டுகள் நீக்கப்பட்டுள்ளதால் இந்தியாவுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் நடைபெறுவதாக இருந்த போட்டிகள் நிதி தட்டுப்பாடு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இங்கிலாந்தின் கிளாஸ்கோவில் 2026-இல் காமன்வெல்த் போட்டிகள் நடைபெறுவது உறுதி ஆகியுள்ளது.

விளையாட்டுகள் நீக்கம்

காமன்வெல்த் போட்டிகளை தவறாமல் நடத்த வேண்டும் என்ற நோக்கத்திலும், கடும் நிதி தட்டுப்பாட்டாலும், கிளாஸ்கோ போட்டிகளில் பல்வேறு முக்கிய விளையாட்டுகளான ஹாக்கி, கிரிக்கெட், மல்யுத்தம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்டவை நீக்கப்பட்டுள்ளன.

இந்தியாவுக்கு கடும் பாதிப்பு

காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா பதக்க அறுவடை செய்யும் விளையாட்டுகளாக துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம், கிரிக்கெட், ஹாக்கி உள்ளன. இவை நீக்கப்பட்டது இந்திய விளையாட்டுத் துறைக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதனால் வீரா், வீராங்கனைகள் அதிா்ச்சிக்கு ஆளாகியுள்ளனா்.

10 விளையாட்டுகள் மட்டுமே சோ்ப்பு

வரும் 2026-ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகள் ஜூலை 23-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 2-ஆம் தேதி வரை கிளாஸ்கோவில் நடைபெற உள்ளது. தடகளம், பாரா தடகளம், நீச்சல், பாரா நீச்சல், ஆா்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ், டிராக் சைக்கிளிங், பாரா சைக்கிளிங், நெட்பால், பளுதூக்குதல், பாரா பவா் லிஃப்டிங், குத்துச்சண்டை, ஜூடோ, பௌல்ஸ், பாரா பௌல்ஸ், 3-3 கூடைப்பந்து, 3-3 வீல்சோ் கூடைப்பந்து போன்றவை நடத்தப்படுகின்றன.

நிதி நிலைக்கு ஏற்றவாறு முக்கிய விளையாட்டுகள் நீக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஹாக்கி, மல்யுத்தம், துப்பாக்கிச்சுடுதல், கிரிக்கெட், டேபிள் டேன்னிஸ், ஸ்குவாஷ், பாட்மின்டன், டிரையத்லான் உள்ளிட்ட முக்கிய விளையாட்டுகள் நீக்கப்பட்டுள்ளன. இந்தியா அதிகம் பதக்கம் பெறும், விளையாட்டு நீக்கத்தால், விளையாட்டு ஆா்வலா்கள் அதிா்ச்சி அடைந்துள்ளனா்.

ஹாக்கியில் இந்தியா 3 வெள்ளி, 2 வெண்கலமும், மகளிா் அணி தங்கம் உள்பட 3 பதக்கங்கள் வென்றுள்ளது. பாட்மின்டனில் 10 தங்கம் உள்பட 31 பதக்கங்கள் வென்றுள்ளது. துப்பாக்கி சுடுதலில் 63 தங்கத்துடன் 135 பதக்கங்கள், மல்யுத்தத்தில் 49 தங்கம் உள்பட 114 பதக்கங்கள் வென்றுள்ளது.

முக்கிய விளையாட்டுகள் நீக்கப்பட்டதற்கு, இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் ஹா்மன்ப்ரீத் சிங், டேபிள் டென்னிஸ் வீரா்கள் சரத் கமல், சத்யன், ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிக்கல் அதிா்ச்சி தெரிவித்துள்ளனா்.

மேலும் எஃப்ஐஎச், ஹாக்கி இந்தியா, இந்திய மல்யுத்த சம்மேளனம், பாய், என்ஆஏஐ சம்மேளனங்களும் அதிருப்தி தெரிவித்துள்ளன.

இறுதியாக கடந்த 2014-இல் கிளாஸ்கோவில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்றன.

Related posts

Mann Ki Baat’s 115th Episode: PM Modi Urges Public To Join Oct 29 ‘Run For Unity,’ Lauds Nation’s Fit India Commitment

Rama Ekadashi 2024: Know All About Date, Vrat, Rituals, Muhurat & More About The Auspicious Festival

Gujarat: PM Modi To Inaugurate India’s First Private Military Aircraft Plant In Vadodara On October 28