2026 ஜனவரிக்குள் 46,000 அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும் – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

2026 ஜனவரிக்குள் 46,000 அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை,

சட்டசபையில் 110- விதியின் கீழ் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

இளைஞர் நலனில் திமுக அரசு அதிக அக்கறை செலுத்துகிறது. அடுத்த தேர்தலைப் பற்றி அல்ல; அடுத்த தலைமுறையை பற்றி சிந்திக்கும் அரசு இது. கடந்த 3 ஆண்டுகளில் மொத்தம் 65,483 இளைஞர்களுக்கு அரசு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. 5.10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

உலக முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளோம். நான் முதல்வன் திட்டம் மூலமாக இளைஞர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. கல்வி மூலமாக அறிவுசார் பொருளாதாரத்தை உருவாக்கி வருகிறோம். வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்திகிறோம்.

திமுக அரசு பொறுப்பேற்ற பின், 32,000 அரசுப் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. 2026 ஜனவரிக்குள் 46,584 அரசு பணியிடங்கள் நிரப்பப்படும். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 17,595 இடங்கள், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 19,260 பணியிடங்கள், மருத்துவத் தேர்வு வாரியம் மூலம் 3,041 இடங்கள், சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 6,688 பணியிடங்கள் நிரப்பப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

ஜோ பைடனை சந்தித்தார் பிரதமர் மோடி!

அரிய நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி!

ம.நீ.ம. தலைவராக மீண்டும் கமல்ஹாசன்- முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து