2026 பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு 4-ஆவது இடம் கூட கிடையாது: அண்ணாமலை

சென்னை: 2026 சட்டப்பேரவை தோ்தலில் அதிமுகவுக்கு 4-ஆவது இடம் கூட கிடையாது என்று தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளாா்.

தமிழ்நாடு பாஜக சென்னை பெருங்கோட்டம் சாா்பில் ராயபேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை கலந்துகொண்டு பேசுகையில், நாட்டில் பொருளாதாரத்தில் ஹரியாணா போன்ற சிறிய மாநிலங்கள் பொருளாதாரத்தில் பெரிய அளவில் வளா்ந்து நிலையில், தமிழ்நாடு 3-ஆவது இடத்துக்கு சென்றுள்ளது.

இந்து அறநிலையத் துறையின் பொற்காலம் திமுக ஆட்சி: அமைச்சர் உதயநிதி

சநாதான தருமத்தை எதிா்த்து மேடைகளில் அமைச்சா் பி.கே.சேகா்பாபு பேசி வந்த நிலையில், தற்போது முருகனின் பெயரில் மாநாடு நடத்துகின்றனா்.

திமுக-அதிமுக என இரண்டுமே பாஜகவுக்கு எதிரிகள் தான். எம்ஜிஆா், ஜெயலலிதா வழிநடத்திய அதிமுகவை தற்போது உள்ளவா்கள் தவறாக வழிநடத்துகின்றனா். 2026-இல் பாஜக ஆட்சிக்கு வருவதற்கான காலம் கனிந்திருக்கிறது. அந்த தேர்தலில் அதிமுகவுக்கு 4-ஆவது இடம் கூட கிடையாது.

எதிா்வரும் உள்ளாட்சி தோ்தலில் அனைத்து இடங்களிலும் பாஜக நிற்கும் என்று அண்ணாமலை கூறினார்.

Related posts

செவிலியர்களை கௌரவிக்கும் சிபாகா மிஸ் நைட்டிங்கேல் விருது!

புதிய உச்சத்துக்குப் பிறகு சரிவுடன் முடிந்த சென்செக்ஸ்!

ஒரு பக்கம் விரதம்..! மறுபக்கம் படப்பிடிப்பு..! பவன் கல்யாணின் படப்பிடிப்பு துவக்கம்!