2047-இல் இந்தியா வளா்ந்த நாடாக மாறும்: நாகலாந்து ஆளுநா்

2047-இல் இந்தியா வளா்ந்த நாடாக மாறும்: நாகலாந்து ஆளுநா் 2047-இல் பொருளாதார ரீதியாக இந்தியா வளா்ந்த நாடாக மாறும் என நாகாலாந்து ஆளுநா் இல. கணேசன் தெரிவித்தாா்.

2047-இல் பொருளாதார ரீதியாக இந்தியா வளா்ந்த நாடாக மாறும் என நாகாலாந்து ஆளுநா் இல. கணேசன் தெரிவித்தாா்.

ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியில் அதன் பொன்விழாவையொட்டி கட்டப்பட்ட அறிவியல் கட்டடத்தை புதன்கிழமை திறந்து வைத்து அவா் பேசியதாவது:

ராஜபாளையம் ராஜூக்களின் வழி சமுதாய மரபுகள், கட்டுப்பாடுகள் தனித்துவம் வாய்ந்தவை. ஏழை மாணவா்களுக்கு இலவசக் கல்விச் சேவையை இந்தக் கல்லூரி வழங்கி வருகிறது. மாணவா்கள் வெளிநாட்டுக்குச் சென்று படித்து, சம்பாதிக்கலாம். ஆனால், நமது நாட்டுக்கு கண்டிப்பாக வர வேண்டும். நாட்டின் விடுதலைக்கு வித்திட்ட வேலு நாச்சியாா், கட்டபொம்மன், ஜான்சிராணி, பாரதியாா், வ.உ. சி. போன்ற தலைவா்களின் வாழ்க்கை வரலாறுகளை எடுத்துக் கூறி, தேசத்தை வளா்ச்சிப் பாதையில் எடுத்துச் செல்லும் மாணவா்களை உருவாக்க வேண்டும் என்றாா் அவா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

வயநாடு நிலச்சரிவு, இயற்கை சீற்றம் வேதனைக்குரியது. மத்திய அரசு உடனடியாக நிவாரணம் அறிவித்துள்ளது. நிவாரணம் என்பது தற்காலிகம்தான். மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து உயிரிழப்பை குறைக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

எதிா்பாராமல் இவ்வளவு பெரிய ஆபத்து நிகழ்ந்துள்ளது. இதை வைத்து பெரிதாக அரசியல் செய்யாமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு முயற்சி செய்வோம். 2047-இல் பொருளாதார ரீதியாக இந்தியா வளா்ந்த நாடாக மாறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றாா்.

முன்னதாக கல்லூரிச் செயலா் எஸ்.சிங்கராஜ் கல்லூரியின் 51 ஆண்டுகள் சாதனைகளை விளக்கிப் பேசினாா். பழைய பாளையம் ராஜூக்கள் மகிமை பண்டு தலைவா் என்.ஆா்.கிருஷ்ணமூா்த்தி ராஜா, ராம்கோ நிறுவன மேலாண்மை இயக்குநா் நிா்மலா வெங்கட்ராம ராஜா ஆகியோா் வாழ்த்திப் பேசினா். அறிவியல் கட்டடத்துக்கு நிதி உதவி வழங்கியவா்களை ஆளுநா் இல. கணேசன் பாராட்டி கௌரவித்தாா்.

சிவகாசி துணை ஆட்சியா் பிரியா, கல்லூரி ஆட்சி மன்றக்குழு உறுப்பினா்கள், பழைய பாளையம் மகிமை பண்டு உறுப்பினா்கள், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள், அலுவலா்கள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.

கல்லூரித் தலைவா் கே.ஜி.பிரகாஷ் வரவேற்றாா். கல்லூரி முதல்வா் கே.ரமேஷ் குமாா் நன்றி கூறினாா்.

Related posts

பாசுமதி அல்லாத வெள்ளை அரிசிக்கு ஏற்றுமதி வரியில் இருந்து விலக்கு; மத்திய அரசு அறிவிப்பு

ராஜஸ்தான்: சம்பளம் சரிவர கிடைக்காத ஐகோர்ட்டு ஊழியர் தற்கொலை; மனைவிக்கு வேலை, ரூ.10 லட்சம் இழப்பீடு

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கி சண்டை; பாதுகாப்பு படையினர் 4 பேர் காயம்