24 தொலை தூர ரயில்கள் ரத்து – எந்தெந்த ரயில்கள் தெரியுமா?

24 தொலை தூர ரயில்கள் ரத்து – எந்தெந்த ரயில்கள் தெரியுமா? – முழு லிஸ்ட் இதோ

ஜூலை கடைசி வாரம் முதல் ஆகஸ்ட் மாதம் தொடக்கம் வரை 24 நீண்ட தூர ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான வழித்தடங்களில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் நாள்தோறும் பல லட்சம் பேர் பயணிக்கின்றனர். இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தில் முக்கிய வழித்தடங்களில் குறிப்பிடத்தக்க உட்கட்டமைப்புகளை மேம்படுத்த ரயில்வே நிர்வாகம் முடிவு எடுத்துள்ளது.

அதன்படி, ஷாஜகான்பூர் – லக்னோ மற்றும் ரோஜா-சீதாபூர் சிட்டி ரயில் பிரிவுகளுக்கு இடையே இரட்டை ரயில் பாதைப் பணிகள் நடைபெறுவதால், இந்த வழித்தடத்தில் 10க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன. அதே நேரத்தில் சில ரயில்கள் மாற்று வழித்தடங்களில் இயக்கப்படும் என்றும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

விளம்பரம்

குறிப்பாக, பீகாரில் இருந்து வைஷ்ணவி தேவி யாத்திரைக்காக ஜம்மு போன்ற இடங்களுக்கும், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் மற்றும் டெல்லி போன்ற இடங்களுக்கும் செல்லும் பயணிகள், இந்த ரயில் ரத்து நடவடிக்கையால் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடலாம். இது தொடர்பாக அறிவித்துள்ள வடகிழக்கு ரயில்வேயின் செய்தி தொடர்பாளர், “உள்கட்டமைப்பு பணிகள் முடிந்தவுடன் ஆகஸ்ட் முதல் வாரத்திற்கு பிறகு வழக்கமான பாதையில் ரயில் சேவைகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

ரத்து செய்யப்பட்ட ரயில்களின் பட்டியல்

விளம்பரம்

12492” மவுர் தவாஜ் சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் (ஜம்மு தாவி முதல் பரெளனி வரை) ஜூலை 26 & ஆகஸ்ட் 2
15212 ஜன் நாயக் எக்ஸ்பிரஸ் (அமிர்தசரஸ் முதல் தர்பங்கா வரை) ஜூலை 25 முதல் ஆகஸ்ட் 6 வரை
14618 ஜன் சேவா எக்ஸ்பிரஸ் – ஜூலை 25 முதல் ஆகஸ்ட் 5 வரை
14604 ஜனசதரன் எக்ஸ்பிரஸ் (அமிர்தசரஸ் முதல் சஹர்சா வரை) ஜூலை 24 முதல் 31 வரை
22552 அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் – ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 4 வரை
15904 சண்டிகர் – திப்ருகர் எக்ஸ்பிரஸ் – ஜூலை 31 & ஆகஸ்ட் 5
12204 கரிப் ரத் ரயில் (அமிர்தசரஸ் முதல் சஹர்சா வரை) ஆகஸ்ட் 3 & 4.
15909 ஆவாத் அசாம் எக்ஸ்பிரஸ் – லால்கர் சந்திப்பில் இருந்து ஆகஸ்ட் 1 முதல் 4 வரை.
15654 அமர்நாத் எக்ஸ்பிரஸ் (ஜம்மு தாவி முதல் கவுகாத்தி வரை) ஆகஸ்ட் 2 மட்டும்.
15531 ஜனசதரன் எக்ஸ்பிரஸ் (சஹர்சா முதல் அமிர்தசஸ் வரை) ஜூலை 31 & ஆகஸ்ட் 4
12408 கர்மபூமி எக்ஸ்பிரஸ் (அமிர்த்சரஸ் – நியூ ஜல்பைகுரி) ஜூலை 19 & ஆகஸ்ட் 2
12491 மவுர் தவாஜ் சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் (பரௌனி முதல் ஜம்மு தாவி வரை) ஜூலை 28 & ஆகஸ்ட் 4.
15211 ஜன் நாயக் எக்ஸ்பிரஸ் (தர்பங்கா முதல் அமிர்தசரஸ் வரை) ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 4 வரை
14617 ஜன் சேவா எக்ஸ்பிரஸ் – ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 7 வரை.
14603 ஜனசதரன் எக்ஸ்பிரஸ் (சஹர்சா முதல் அமிர்தசரஸ் வரை) ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 2 வரை
22551 அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் – ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 3 வரை
15910 அவத் அசம் எக்ஸ்பிரஸ் – ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 1 வரை
15653 அமர்நாத் எக்ஸ்பிரஸ் (கவுகாத்தி முதல் ஜம்மு தாவி வரை) ஜூலை 31 மட்டும்.
15531 ஜனசதரன் எக்ஸ்பிரஸ் (சஹர்சா முதல் அமிர்தசரஸ் வரை) ஜூலை 21 & ஆகஸ்ட் 4
12407 கர்மபூமி எக்ஸ்பிரஸ் (புதிய ஜல்பைகுரி முதல் அமிர்தசரஸ் வரை) ஜூலை 24 & ஆகஸ்ட் 7.

விளம்பரம்

24 ரயில்கள் ரத்து செய்யப்படுவதால், இந்த வழித்தடங்களில் பயணிக்க விரும்புவோர் மாற்று பயணத் திட்டத்தை வகுத்துக் கொள்ளுமாறு, வடகிழக்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
new strain
,
special trains
,
Train

Related posts

2016 ஜூன் 15 கொல்லம் கலெக்டர் அலுவலக குண்டு வெடிப்பு: மதுரையை சேர்ந்த மூவர் குற்றவாளிகள்

ஆன்லைனில் கட்டிட அனுமதியை விரைவாக வழங்க வழிகாட்டுதல்: 30 நாளில் உத்தேச தடையின்மை சான்று

ரூ.158 கோடியில் தொழில்நுட்ப கட்டிடம்: கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்