3வது டி20: ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

23 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றிபெற்றது.

ஹராரே,

சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரில் இதுவரை 2 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன.இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டி20 போட்டி ஹராரேவில் இன்று நடைபெற்றது.இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் , கில் களமிறங்கினர். தொடக்கம் முதல் இருவரும் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். தொடக்க விக்கெட்டுக்கு 67 ரன்கள் சேர்த்த நிலையில் ஜெய்ஸ்வால் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.தொடர்ந்து அபிஷேக் ஷர்மா 10 ரன்களுக்கு வெளியேறினார். மறுபுறம் கில் அரைசதம் அடித்து அசத்தினர் .தொடர்ந்து கில் – ருதுராஜ் இணைந்து சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தனர்.கில் 66 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் . அதிரடியாக விளையாடிய ருதுராஜ் கெயிக்வாட் 49 ரன்களில் வெளியேறினார்.இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது . தொடர்ந்து 183 ரன்கள் இலக்குடன் ஜிம்பாப்வே அணி விளையாடியது.

ஜிம்பாப்வே அணியின் தொடக்க வீரர்களாக வெஸ்லி மாதேவேரே- தடிவானாஷே மருமணி ஆகியோர் களமிறங்கினர். வெஸ்லி மாதேவேரே 1 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த பிரையன் பென்னட் 4, தடிவானாஷே 13, ராசா 15, ஜொனாதன் காம்ப்பெல் 1 அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர்.இந்நிலையில் டியான் மியர்ஸ் – கிளைவ் மடாண்டே ஜோடி பொறுப்புடன் ஆடி அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். கிளைவ் மடாண்டே 37 ரன்னில் ஆட்டமிழந்தனர். இறுதியில் டியான் மியர்ஸ் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தார்.இதனால் ஜிம்பாப்வே அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 23 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டும் ஆவேஷ் கான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

Related posts

டெஸ்ட் கிரிக்கெட்: மாபெரும் சாதனை பட்டியலில் 5-வது வீரராக இணைந்த அஸ்வின்

வங்காளதேசத்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட்: சதம் அடித்த பின் அஸ்வின் கூறியது என்ன..?

டெஸ்ட் கிரிக்கெட்: சச்சின் – ஜாகீர்கான் சாதனையை தகர்த்த அஸ்வின் – ஜடேஜா