3-ஆம் உலகப் போர் மூளும்! அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் எச்சரிக்கை

இஸ்ரேல் – ஹிஸ்புல்லா இடையே சண்டை தீவிரமடைந்துள்ள நிலையில், இதே நிலைமை நீடித்தால் 3-ஆம் உலகப் போருக்கு வழிவகுக்குமென அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளார்.

இது குறித்து ஞாயிற்றுக்கிழமை(ஆக. 25) அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, மத்திய கிழக்கு நாடுகளில் தொடர்ச்சியாக குண்டுகள் வீசப்பட்டு வருவதாக கவலை தெரிவித்துள்ளார்.

Who is negotiating for us in the Middle East? Bombs are dropping all over the place! Sleepy Joe is sleeping on a Beach in California, viciously Exiled by the Democrats, and Comrade Kamala is doing a campaign bus tour with Tampon Tim, her really bad V.P. Pick. Let’s not have World…

— Donald J. Trump (@realDonaldTrump) August 25, 2024

”ஜனநாயகக் கட்சியினரால் வெளியேற்றப்பட்டுவிட்ட அமெரிக்க அதிபர் உள்ள ஜோ பைடன் தற்போது கடற்கரையில் ஓய்வெடுத்துக் கொண்டிருப்பதாகவும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். தன்னை எதிர்த்து அதிபர் பதவிக்கு போட்டியிடும் கமலா ஹாரிஸ், துணை அதிபர் வேட்பாளர் டேம்பொன் டிம் உடன் சேர்ந்து வாகனப் பேரணி நடத்தி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருவதாகவும் கூறியுள்ளார் டிரம்ப்.

3-ஆம் உலகப் போரை நோக்கி நகரும் இந்த சூழலில், அமெரிக்காவுக்காக மத்திய கிழக்கு நாடுகளில் பேச்சுவார்த்தை நடத்துவது யார்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார் டொனால்டு டிரம்ப்.

NOVEMBER 5TH WILL BE THE MOST IMPORTANT DAY IN THE HISTORY OF AMERICA!

— Donald J. Trump (@realDonaldTrump) August 25, 2024

உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ள அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில், நவ. 5-ஆம் தேதி அமெரிக்க வரலாற்றில் முக்கியமான நாள் என்றும் தெரிவித்துள்ளார்.

Related posts

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: இரு நாள்களில் 558 பேர் பலி!

உடல் எடையை அதிகரிக்கும் ராம் சரண்!

தொடரை வெல்லும் முனைப்பில் ஆஸி: இங்கிலாந்து டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!