3 மணிநேரத்துக்கு 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரோடு, நாமக்கல், சேலம், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

pic.twitter.com/99UYYC5Ulg

— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) August 28, 2024

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, அடுத்த ஏழு தினங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தென் மண்டல வானிலை மையம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது.

இதேபோன்று, வங்கக்கடலில் நாளை (ஆக. 29) மத்திய கிழக்கு மற்றும் அதை ஒட்டிய வடக்கு வங்கக் கடலில் புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

திரைப்பட இயக்குனர் மோகனை கைது செய்வதா? – டாக்டர் ராமதாஸ் கண்டனம்

உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

‘தமிழக அமைச்சரவையில் மாற்றம்…’ – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்