3 மணி நிலவரம்.. சென்னையில் அடுத்து பெய்யவிருக்கும் மழை!

சென்னை: காலையில் இருந்த கனமழையைக் காணவில்லையே என்று நினைக்க வேண்டாம்.. சென்னைக்கு மிக அருகே கடல் பரப்பில் மேகக் கூட்டங்கள் காத்திருப்பதாக வானிலை ஆய்வுகளை வெளியிட்டு வரும் தமிழ்நாடு வெதர்மேன் என அறியப்படும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

இன்று பிற்பகல் 3 மணியளவில் அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், சென்னைக்கு மிக அருகே, கடல்பரப்பில் மேகக் கூட்டங்கள் காத்திருக்கின்றன. இது விரைவில் சென்னை நகருக்குள் வந்து மிகக் கனமழையை கொடுக்கும். இதனால், சென்னைக்கு அடுத்த சுற்று கனமழை கிடைக்கவிருக்கிறது. கடந்த 6 மணி நேரத்தில் மட்டும் சென்னையில் சில இடங்களில் 150 மி.மீ. க்கும் மேல் மழை பெய்துள்ளது. குறிப்பாக வட சென்னை மற்றும் மத்திய சென்னைப் பகுதிகளில்.

இன்று நள்ளிரவு முதல் பல இடங்களில் 200 மி.மீ.க்கும் மேல் மழை பெய்யும்.

அடுத்து பெய்ய விருக்கும் மழை மிக நீண்டதாக இருக்கும், இன்று இரவு சென்னையை நெருங்கும் மழை மேகங்கள் இன்னமும் பலமானதாகவும் இருக்கும். அதிக மழையைக் கொடுக்கும்.

எனவே மக்களே சார்ஜ் போட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

மோட்டார் போட்டு தண்ணீர் நிரப்பு தேவையான அளவுக்கு தண்ணீர் பிடித்துக் வைத்துக்கொள்ளுங்கள்.

தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

Related posts

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: ஆளுநருக்கு எந்தத் தொடர்பும் இல்லை

டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி புதிய சாதனை!

பாபா சித்திக் கொலை வழக்கு: மேலும் 5 பேர் கைது