3 மாவட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

தமிழகத்தில் உள்ள 3 மாவட்டங்களில் இயங்கி வரும் தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் சேனாதிபதி பாளையத்தில் உள்ள பிரபல தனியார் பள்ளிக்கு மின்னஞ்சல் மூலம் வியாழக்கிழமை காலை வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, காவல்துறைக்கு தகவல் அளித்ததுடன் பள்ளிக்கு விடுமுறை அறிவித்து மாணவர்கள் அனைவரும் பத்திரமாக பெற்றோர்களுடன் அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும், வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட தனியார் பள்ளியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினார்.

அதேபோல், சேலம் மற்றும் திருச்சி மாவட்டங்களில் உள்ள தனியார் பள்ளிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு வெடிகுண்டு நிபுணர்கள் மூலம் காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

மூன்று மாவட்டங்களிலும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட அனைத்து பள்ளிகளும் ஒரே நிறுவனத்துக்கு சொந்தமானது.

அரபிக் கடலில் நாளை உருவாகிறது புயல்!

முன்னதாக, அமெரிக்கா சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் விமானத்துக்கு செவ்வாய்க்கிழமை இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. துபையில் தரையிறங்கிய விமானத்தை சோதனை செய்த அதிகாரிகள், இந்த மிரட்டல் வெறும் புரளி எனத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

மாநாட்டுக்கு காவல்துறை அனுமதி மறுப்பா ? த.வெ.க. விளக்கம்

தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகள் முன்பு விரைவில் முற்றுகை போராட்டம்: செல்வப்பெருந்தகை அறிவிப்பு

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு