300 அடி பள்ளத்தில் காருடன் விழுந்து இளம்பெண் பரிதாப பலி… ஷாக் வீடியோ

300 அடி பள்ளத்தில் காருடன் விழுந்து இளம்பெண் பரிதாப பலி… ஷாக் வீடியோ!

300 அடி பள்ளத்தில் காருடன் விழுந்து இளம்பெண் பரிதாப பலி

கார் ஓட்டும் பயிற்சியின்போது, ரிவர்ஸ் எடுத்து பழகிய இளம்பெண், பரிதாபமாக உயிரிழந்த காட்சிகள் வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத் பகுதியைச் சேர்ந்த சூரஜ் சஞ்சவ் அவரது தோழி ஸ்வேதா தீபக் சர்வேஸ் உடன், நேற்று (திங்கட்கிழமை) மதியம் சுலிபஞ்சன் ஹில்ஸ் பகுதிக்குச் சென்றனர். அங்கு சிறிது நேரம் இருவரும் பொழுதை கழித்த நிலையில், தனக்கு கார் ஓட்டக் கற்றுக் கொடுக்குமாறு, சூரஜிடம் ஸ்வேதா கேட்டுள்ளார்.

சூரஜும் தோழிக்கு கார் ஓட்டப் பழகி கொடுத்த நிலையில், சிறிது நேரத்தில் தான் மட்டும் தனியாக கார் ஓட்ட வேண்டும் என்று ஸ்வேதா கூறியுள்ளார். இதையடுத்து, காரில் இருந்து இறங்கிய சூரஜ், தனது தோழி கார் ஓட்டும் காட்சியை செல்போனில் வீடியோ எடுக்கத் தொடங்கினார். முதலில் நன்றாக கார் ஓட்டிய ஸ்வேதா, ஒரு கட்டத்தில் ரிவர்ஸ் எடுக்க முயற்சித்தார்.

விளம்பரம்

இதையும் படிங்க : திறப்பு விழாவுக்கு முன்பே திடீரென இடிந்து விழுந்த பாலம்… பீகாரில் நடந்த பரபரப்பு சம்பவம்!

அதையும் சூரஜ் வீடியோ எடுத்துக் கொண்டிருந்த நிலையில், கார் ரிவர்ஸ் கியரில் இருந்தபோது, ஸ்வேதா கிளட்சை மிதித்து கொஞ்சம் கொஞ்சமாக நகர்த்துவதற்கு பதிலாக, அதிவேகத்தில் ஆக்சிலேட்டரை மிதித்தார். இதனால், பின்னோக்கி வேகமாக சென்ற கார், 50 மீட்டர் தொலைவில் இருந்த பள்ளத்தில் விழுந்து நொறுங்கியது. இந்த காட்சிகள் சமூகவலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

#JUSTIN மகாராஷ்டிராவில் காரை ரிவர்ஸ் எடுத்த போது நடந்த விபரீதம்; இளம் பெண் உயிரிழப்பு#Maharashtra#CarAccident#News18tamilnadu | https://t.co/uk2cvptedPpic.twitter.com/65m7OxFVCk

— News18 Tamil Nadu (@News18TamilNadu) June 18, 2024

விளம்பரம்

300 அடி பள்ளத்தில் கார் உருண்டு விழுந்ததில், காரை ஓட்டிய ஸ்வேதா பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, அங்கு வந்த மீட்புக்குழுவினர் காரையும், ஸ்வேதாவின் உடலையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Car
,
car accident

Related posts

லட்டு பிரசாதத்தின் புனிதத்தை மீட்டெடுத்து விட்டோம் – திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி லட்டு தரத்தில் சமரசம் கிடையாது: திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி லட்டு விவகாரம்: பா.ஜ.க. – சந்திரபாபு நாயுடு கூட்டணியில் உரசலா..?