“370வை யாராலும் கொண்டுவர முடியாது..” – காஷ்மிரில் ராஜ்நாத் சிங் சூளுரை

“370வை யாராலும் கொண்டுவர முடியாது..” – காஷ்மீரில் ராஜ்நாத் சிங் சூளுரை!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370 நீக்கத்திற்கு பிறகு மாநில அந்தஸ்தும் நீக்கப்பட்டு யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது. இந்நிலையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் ஜம்மு காஷ்மீருக்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்தத் தேர்தலில் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி, காங்கிரஸ், சி.பி.எம். உள்ளிட்ட கட்சிகள் ஒரு கூட்டணியில் உள்ளன. ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சியும், பா.ஜ.கவும் தனித்து போட்டியிடுகின்றன. சிறப்பு அந்தஸ்து நீக்கத்திற்கு பிறகு நடைபெறும் முதல் சட்டமன்றத் தேர்தல் என்பதால் ஜம்மு காஷ்மீர் தேர்தல் இந்தியா முழுவதும் கவனம் பெற்றுள்ளது.

விளம்பரம்

90 தொகுதிகள் கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்திற்கு செப். 18, செப். 25 மற்றும் அக். 1 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறுகின்றன. வாக்கு எண்ணிக்கை அக். 8ம் தேதி நடைபெறுகிறது. இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் ஜம்மு காஷ்மீரில் அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றன.

இதையும் படியுங்கள் :Hema Committee: “முணு வருஷமா என்ன பண்ணீங்க..” – கேரள அரசுக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி

விளம்பரம்

இந்நிலையில், ராம்பன் தொகுதியில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துக்கொண்டு தனது கட்சி வேட்பாளருக்கு வாக்குகளை சேகரித்தார். இந்தப் பொதுக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் ராஜ்நாத் சிங், “ஜம்மு காஷ்மீரில் ஆட்சி அமைக்க பாஜகவுக்கு ஆதரவளித்தால், பெரிய அளவில் வளர்ச்சியை ஏற்படுத்த முடியும். அந்த வளர்ச்சி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருக்கும் மக்கள் பாகிஸ்தானுடன் இருப்பதைவிட இந்தியாவுடன் சேரும் வகையில் இருக்கும்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வசிப்பவர்களை பாக்கிஸ்தான் வெளிநாட்டினரை போல் நடத்துகிறது. நாங்கள் உங்களை எங்களின் சொந்தங்களாக கருதுகிறோம். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வசிப்பவர்கள் இந்தியாவுடன் சேர வேண்டும். பயங்கரவாதத்தை பாகிஸ்தான் கைவிட்டால் அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார். பாஜக இருக்கும் வரை, 370-ஆவது சட்டப்பிரிவை யாரும் திரும்பக் கொண்டுவர முடியாது” என பேசினார்.

விளம்பரம்

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
BJP
,
Jammu and Kashmir
,
Latest News
,
Rajnath Singh

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்