4வது முறையாக முதலமைச்சராக பதவியேற்றார் சந்திரபாபு நாயுடு!

4வது முறையாக ஆந்திர பிரதேச முதலமைச்சராக பதவியேற்றார் சந்திரபாபு நாயுடு!

சந்திரபாபு நாயுடு

ஆந்திர பிரதேச முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு 4வது முறையாக பதவியேற்றார்.

175 தொகுதிகளை கொண்ட ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சித் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 164 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்எல்ஏக்கள் அலோசனைக் கூட்டம் விஜயவாடாவில் நடைபெற்றது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக சந்திரபாபு நாயுடுவை, ஜனசேனா தலைவர் பவன் கல்யான் முன்மொழிந்தார்.

பின்னர் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக சந்திரபாபு நாயுடு தேர்வு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து கூட்டணி கட்சிகளிடன் ஆதரவு கடிதங்களுடன் சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கல்யான் ஆகியோர், ஆளுநர் அப்துல் நசீரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினர். இதனைத்தொடர்ந்து, ஆட்சியமைக்க வருமாறு சந்திரபாபு நாயுடுவுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார்.

விளம்பரம்

இதையடுத்து சந்திரபாபு நாயுடு ஆந்திர முதலமைச்சராக நான்காவது முறையாக இன்று (12.06.2024) காலை பதவியேற்றார். கடவுளின் சாட்சியாக என்று கூறி முதல்வர் பதவியை ஏற்றபோது அங்கிருந்த கட்சி தொட்ணடர்கள் ஆராவரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த விழாவிற்கு வருகை தந்த பிரதமர் மோடி, சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவியேற்ற பின் அவரை ஆரத்தழுவி தனது வாழ்த்துகளை வெளிப்படுத்தினார்.

இதையும் படிங்க : ஆந்திராவின் மகிழ்மதி.. சந்திரபாபு நாயுடுவின் கனவுத் திட்டத்தின் கள நிலவரம் என்ன?

சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவியேற்றுக் கொண்டதை அடுத்து அவரது தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்ற அமைச்சர்களும் பதவியேற்று கொண்டனர். ஜனசேனா தலைவர் பவன் கல்யாண் அமைச்சராக பதவியேற்று கொண்டார்.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
andhra cm
,
Andhra Pradesh
,
andhra pradesh cm
,
chandrababu
,
N Chandrababu Naidu

Related posts

பெங்களூருவில் அதிர்ச்சி: இளம்பெண் உடல் 30 துண்டுகளாக பிரிட்ஜில் இருந்த கொடூரம்

“ஏழுமலையானே என்னை மன்னித்துவிடு…” – பவன் கல்யாண் பதிவு

காவல் நிலையங்களில் கூட பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: நவீன் பட்நாயக்