46% மருத்துவர்கள் பாதுகாப்பற்ற சூழலில் இருக்கின்றனர் – மருத்துவ சங்கம்

நாட்டில் 46% மருத்துவர்கள் பாதுகாப்பற்ற சூழலில் இருக்கின்றனர் – இந்திய மருத்துவர்கள் சங்கம்

மருத்துவர்கள்

நாட்டில் உள்ள 46 சதவிகித மருத்துவர்கள் பாதுகாப்பற்ற சூழலில் இருப்பதாக இந்திய மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மருத்துவர்களின் பாதுகாப்பு குறித்து நாடு முழுவதும் இந்திய மருத்துவர்கள் சங்கத்தினர் ஆய்வு மேற்கொண்டனர். சுமார் 3,885 மருத்துவர்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், 46 விழுக்காடு மருத்துவர்கள் பாதுகாப்பற்ற சூழலில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, 35 சதவிகித மருத்துவர்கள் இரவுப் பணியின் போது மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் இருப்பதாக கூறியுள்ளனர்.
அதிலும் 20 முதல் 30 வயதுள்ள மருத்துவர்கள் தங்கள் பாதுகாப்பு குறித்து பெரிதும் கவலை தெரிவித்துள்ளனர்.

விளம்பரம்இதையும் படிங்க: பொங்கல் விழாவையொட்டி வேட்டி, சேலை வழங்கும் திட்டத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு!

மேலும், 55 சதவிகித மருத்துவர்கள் மட்டுமே இரவுப் பணியின் போது தங்களுக்கு அறை ஒதுக்குவதாகவும், எஞ்சிய மருத்துவர்கள் வார்டு அல்லது வேறு ஏதேனும் இடத்தில் உறங்குவதாகவும் கூறியுள்ளனர்.

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Indian Medical Council

Related posts

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: இரு நாள்களில் 558 பேர் பலி!

உடல் எடையை அதிகரிக்கும் ராம் சரண்!

தொடரை வெல்லும் முனைப்பில் ஆஸி: இங்கிலாந்து டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!