பிரான்ஸில் முதியவர் தனது மனைவியை அந்நியர்கள் மூலம் 10 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் உலக அரங்கில் பேசுபொருளாகி உள்ளது.
பிரான்ஸில் வசித்து வந்த 71 வயதான டொமினிக் பெலிக்கோட் என்பவர், சுமார் 72 ஆண்களை வைத்து, தனது மனைவியான கிசெல் பெலிகோட்டை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். தனது மனைவியை பாலியல் வன்கொடுமை செய்வதற்கு முன்பாக, கிசெலுக்கு போதை மருந்து அளித்து வந்துள்ளார். மேலும், 72 ஆண்கள் மூலம், தனது மனைவியை சுமார் 92 பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளார்.
விதிமுறைகள்
டொமினிக், தனது மனைவியை பாலியல் வன்கொடுமை செய்ய வரும் ஆண்களிடம் சில விதிமுறைகளையும் கூறியுள்ளார்.
கிசெலை பாலியல் வன்கொடுமை செய்யும்போது, அவரை எழுப்பக் கூடாது. வாசனை தரும் திரவியங்களைப் பூசியிருக்கக் கூடாது; சிகரெட் நாற்றங்களைக் கொண்டிருக்கக் கூடாது. தொந்தரவு தரும் நகங்களைக் கொண்டிருக்கக் கூடாது.
வரும் நபர்கள், தங்கள் கார்களை வீட்டில் நிறுத்தாமல் வேறு இடங்களில்தான் நிறுத்த வேண்டும். படுக்கையறையில் ஆடைகளை விட்டுச் செல்லக்கூடாது என்பதற்காக, சமையலறையில் மட்டுமே ஆடைகளைக் களைய வேண்டும்.
கிசெல் விழித்திருப்பதைத் தவிர்க்க, தங்கள் குளிர்ந்த கைகளை, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும் முதலான விதிமுறைகளைப் பின்பற்றச் சொல்லியிருக்கிறார், டொமினிக் பெலிக்கோட்.
கொல்கத்தா மருத்துவமனை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
குற்றங்கள் எவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டன?
கிசெல் பெலிகோட் மீதான முதல் பாலியல் வன்கொடுமை 2011-ல் தொடங்கி, சுமார் 10 ஆண்டுகள் வரையில் நீடித்ததாகக் கூறப்படுகிறது. 2020 ஆம் ஆண்டில், பல்பொருள் அங்காடியில் பெண்களைப் படம்பிடித்ததற்காக, டொமினிக்கை காவல்துறையினர் கைது செய்தனர்.
விசாரணையில், அவரது மொபைல் போன் மற்றும் பிற சாதனங்களில் இருந்து ஆயிரக்கணக்கான புகைப்படங்களும் விடியோக்களும் இருப்பது தெரிய வந்தது.
அந்த குற்றத்தில் விசாரணை நடத்தியதிலிருந்துதான், கிசெல் மீதான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் வெளிச்சத்திற்கு வந்தன.
டொமினிக்கும், தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டார். அதுவரையில், தான் பாலியல் வன்கொடுமை ஆளாக்கப்பட்டு வந்ததை, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வரையில் கிசெல் அறிந்திருக்கவில்லை என்பதுதான் குறிப்பிடத்தக்கது.
டொமினிக் தவிர, இந்த குற்றச் சம்பவங்களில் 51 ஆண்கள் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. இருப்பினும், இந்த பாலியல் வன்கொடுமைகளுக்கு, டொமினிக் பணமேதும் பெற்றுக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
ஆனால், ஒவ்வொரு சம்பவத்தினையும் படம்பிடித்து வந்துள்ளார் என்பது தெரிகிறது.
குற்றங்களில் ஈடுபட்டோர்
இந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் பல்வேறான தரப்பினர் ஈடுபட்டிருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஒரு நிறுவனத்தின் முதலாளி, ஒரு பத்திரிகையாளர், ஒரு தீயணைப்புப் படை அதிகாரி, ஒரு டிரைவர் உள்பட. அவர்களில் சிலர் திருமணமானவர்கள், சிலர் ஒற்றை அல்லது விவாகரத்து பெற்றவர்கள், சிலர் உறவினர்களும்கூட.
டொமினிக் பெலிக்கோட் உள்பட குற்றம் சாட்டப்பட்ட 51 பேரில், 20 பேர் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்; மற்றவர்கள் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், இவர்கள் அனைவருக்கும் குறைந்தது 20 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை இல்லாத அளவுக்கு தளபதியை கொண்டாடுங்கள்..! வெங்கட் பிரபு வெளியிட்ட விடியோ!