6,0,6,6,6: 37 வயதிலும் அதிரடி காட்டும் கைரன் பொல்லார்ட்! (விடியோ)

முன்னாள் மே.இ.தீ. அணி வீரர் கைரன் பொல்லார்டு கரீபியன் பிரீமியர் லீக் (சிபிஎல்) தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறார்.

முதலில் ஆடிய செயிண்ட் லூசியா கிங்ஸ் 187 /6 ரன்கள் அடித்தது. இந்த அணிக்கு டு பிளெஸ்ஸி கேப்டனாக இருக்கிறார். 188 ரன்கள் இலக்குடம் விளையாடிய டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி 19.1 ஓவரில் வெற்றி பெற்றது.

இந்த அணிக்கு கைரன் பொல்லார்ட் கேப்டனாக இருக்கிறார். 19 பந்துகளில் 52 ரன்கள் அடித்து அசத்தியுள்ளார். இதில் 7 சிக்ஸர்கள் அடங்கும்.

இன்றுமுதல் 45-ஆவது செஸ் ஒலிம்பியாட்: பதக்க இலக்குடன் பங்கேற்கும் இந்தியா்கள்

கடைசி 12 பந்துகளில் 27 ரன்கள் தேவைப்படும்போது 19ஆவது ஓவரை மேத்திவ் போர்ட் வீச வந்தார். அவரது ஓவரில் 0,6,0,6,6,6 என மொத்தம் 24 ரன்கள் அடித்து பொல்லார்ட் அசத்தினார். 37 வயதிலும் அதிரடியாக விளையாடும் பொல்லார்ட்டின் இந்த விடியோ வைரலாகி வருகிறது.

பொல்லார்ட் அணி புள்ளிப் பட்டியலில் 3ஆவது இடம் வகித்துள்ளது.

பொல்லார்ட் மும்பை இந்தியன் அணியின் பயிற்சியாளராக இருப்பது குறிப்பிடத்தக்கது.

KIERON POLLARD MADNESS IN CPL…..!!!!
TKR needed 27 runs from 11 balls then Pollard smashed 6,0,6,6,6 to register a great comeback win.
Captain Pollard scored 52* runs from 19 balls including 7 sixes in the chase. pic.twitter.com/yHPwUSrcGS

— Johns. (@CricCrazyJohns) September 11, 2024

Related posts

2025-இல் இந்தியாவில் க்வாட் மாநாடு: பிரதமர் மோடி

திருப்பதி லட்டு விவகாரம்: ஜெகன்மோகன் ரெட்டி வீட்டை முற்றுகையிட்ட பாஜகவினர் கைது

திருப்பதி லட்டு விவகாரம்.. சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்