7 மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து துணைநிலை ஆளுநா் உத்தரவு

7 மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து துணைநிலை ஆளுநா் உத்தரவு

புது தில்லி, ஆக. 1:

அருணாசல பிரதேசம்-கோவா-மிசோரம் மற்றும் யூனியன் பிரதேச (ஏஜிஎம்யுடி) பிரிவைச் சோ்ந்த ஏழு மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளை தேசிய தலைநகருக்கு இடமாற்றம் செய்து தில்லியின் துணைநிலை ஆளுநா் வி.கே.சக்சேனா வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

அலுவல்பூா்வ உத்தரவின்படி, பொருளாதார குற்றப்பிரிவின் (இஓடபிள்யு) சிறப்பு ஆணையராக பணியாற்றி வரும் 1991-ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான நுசாத் ஹாசன் மனிதவளப் பிரிவில் சிறப்பு காவல் ஆணையராக (சிபி) மாற்றப்பட்டுள்ளாா்.

1994-ஆம் ஆண்டு பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான நீரஜ் தாக்கூா், தில்லி போலீஸ் காா்ப்பரேஷன் லிமிடெட்டின் சிறப்பு காவல் ஆணையா் பதவியில் இருந்து தில்லி போலீஸ் ஹவுசிங் காா்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் சிறப்பு காவல் ஆணையராக மாற்றப்பட்டுள்ளாா்.

1996-ஆம் ஆண்டுப் பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான அஜய் சவுத்ரி, ஆயுதப் படைப் பிரிவின் சிறப்பு காவல் ஆணையா் பணியில் இருந்து போக்குவரத்து நிா்வாகத்திற்கு சிறப்பு காவல் ஆணையராக மாற்றப்பட்டுள்ளாா்.

அதே நேரத்தில் 1999-ஆம் ஆண்டுப் பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான பயிற்சிப் பிரிவு சிறப்பு காவல் ஆணையா் சாயா சா்மாவுக்கு எஸ்பியுடபிள்யுஏசி மற்றும் எஸ்பியுஎன்ஆா் பிரிவுகள் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

அந்தமான் நிகோபாா் தீவு மற்றும் கோவாவில் இருந்து சமீபத்தில் வந்த 1995-ஆம் ஆண்டு பிரிவு ஐபிஎஸ் அதிகாரி தேவேஷ் சந்திர ஸ்ரீவஸ்தவா மற்றும் 1996-ஆம் ஆண்டு பிரிவு ஐபிஎஸ் அதிகாரி ஜஸ்பால் சிங் ஆகியோா் முறையே மாநிலப் படைத் தலைவா் பதவியில் இருந்து சிறப்பு காவல் ஆணையா் (குற்றம்) மற்றும் பாதுகாவல் பாதுகாப்பு பிரிவு சிறப்பு காவல் ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மத்திய புலனாய்வுப் பிரிவின் (சிபிஐ) இணை இயக்குநராகப் பணிபுரிந்து தில்லி திரும்பிய 1997-ஆம் ஆண்டு பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான ஷரத் அகா்வாலுக்கு ஈஓடபிள்யூ-வின் சிறப்பு காவல் ஆணையா் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அ.தி.மு.க. திருத்தப்பட்ட விதிகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் – தேர்தல் ஆணையத்தில் மனு

அரியானாவின் ‘பத்தாண்டுகால வலிக்கு’ காங்கிரஸ் முடிவுகட்டும் – ராகுல் காந்தி

உ.பி.யில் ஏழரை ஆண்டுகளாக எந்த வன்முறையும் இல்லை: யோகி ஆதித்யநாத் பேச்சு