70வது தேசிய திரைப்பட விழா: ஏ.ஆர். ரகுமானுக்கு தேசிய விருது வழங்கிய ஜனாதிபதி

70வது தேசிய திரைப்பட விழாவில் இசை அமைப்பாளர் ஏ. ஆர் ரகுமானுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.

புது டெல்லி,

ஆண்டுதோறும் இந்திய திரைப்படங்களையும், கலைஞர்களையும் ஊக்குவிக்கும் விதமாக இந்திய திரை படைப்புகளுக்கு இந்திய அரசால் தேசிய விருது வழங்கப்படுகிறது. இதற்கு ஒவ்வொரு ஆண்டும் அரசால் நியமிக்கப்படும் தேசிய தேர்வுக்குழு இதனை தேர்ந்தெடுக்கிறது.

2022-ம் ஆண்டின் சிறந்த படத்துக்கான விருது அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று டெல்லியில் 70-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெறுகிறது.விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசிய விருது வென்ற திரைப்பட கலைஞர்களுக்கு தேசிய விருதுகளை வழங்கி கௌரவிக்கிறார். தமிழில் இந்த பல கலைஞர்கள் தேசிய விருது வென்றுள்ளனர்.

இதில் தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் மட்டும் சிறந்த படம், சிறந்த ஒளிப்பதிவு (ரவிவர்மன்), சிறந்த பின்னணி இசை (ஏ.ஆர்.ரகுமான்), சிறந்த ஒலிப்பதிவு (ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி) ஆகிய பிரிவுகளில் 4 விருதுகளை வென்றுள்ளது.

இந்த விழாவில் 'பொன்னியின் செல்வன்' பாகம் 1 படத்தின் இசை அமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை ஜனாதிபதி வழங்கியுள்ளார். இது ஏ ஆர் ரகுமானின் ஏழாவது தேசிய விருது என்பது குறிப்பிடத்தக்கது.

Celebrating the brilliance of #IndianCinema at the 70th #NationalFilmAwards!Award for the ‘Best Music Direction (Background Music)’ is conferred to @arrahman for ‘Ponniyin Selvan-Part 1’ (Tamil).@rashtrapatibhvn@AshwiniVaishnaw@Murugan_MoS@nfdcindia@PIB_India… pic.twitter.com/1sAhbBtVOx

— Ministry of Information and Broadcasting (@MIB_India) October 8, 2024

Original Article

Related posts

‘டிடி ரிட்டன்ஸ் 2’ திரைப்படத்தின் அப்டேட்!

எதிர்மறையான விமர்சனத்தை பெற்று வரும் ‘ஜோக்கர் 2’ படம்

ரூ.50 கோடி மதிப்பிலான நிலத்தை மீட்ட நடிகர் கவுண்டமணி