70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு ரூ.5 லட்சத்துக்கான சுகாதாரக் காப்பீடு -மத்திய அரசு ஒப்புதல்

70 வயது மற்றும் 70 வயதைக் கடந்த மூத்த குடிமக்களுக்கு ரூ. 5 லட்சத்துக்கு இலவச சுகாதாரக் காப்பீடு திட்டத்தை செயல்படுத்த மத்திய கேபினட் அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

70 வயதைக் கடந்த முதியோர்களுக்கு அவர்களது வருமானத்தை பொருட்படுத்தாமல் அனைவருக்கும் ‘ஆயுஷ்மான் பாரத் பிரதமர் ஜன் யோஜனா (ஏபி பிஎம் – ஜெய்)’ திட்டத்தின்கீழ், ஓர் ஆண்டுக்கு ரூ. 5 லட்சத்துக்கு சுகாதாரக் காப்பீடு செயல்படுத்தப்படுமென்று மத்திய அரசு இன்று(செப்.11) தெரிவித்துள்ளது.

இதன்மூலம், சுமார் 6 கோடி மூத்த குடிமக்கள் பயனடைவர் என்று மத்திய அமைச்சர் அஸ்விணி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

ஆண்டுக்கு சுகாதாரக் காப்பீடாக ரூ. 5 லட்சம் வழங்க, இன்று நடைபெற்ற கேபினட் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், நாலரை கோடி குடும்பங்கள் பயனடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்குப் புது காப்பீடு அட்டைகளும் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற தனியார் காப்பீடு, இஎஸ்ஐ திட்டத்தில் சுகாதார காப்பீடு எடுத்துக்கொண்டுள்ள 70 வயது அல்லது அதற்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் இத்திட்டத்தில் சேர்ந்து பயனடையலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற பொதுத்துறை காப்பீட்டு திட்டத்தில் இணைந்துள்ள 70 வயது அல்லது அதற்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் மேற்கண்ட காப்பீட்டில் சேர விரும்பினால், தாங்கள் ஏற்கெனவே சேர்ந்துள்ள காப்பீட்டு திட்டத்திலிருந்து விலகிக் கொள்ள வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

2025-இல் இந்தியாவில் க்வாட் மாநாடு: பிரதமர் மோடி

திருப்பதி லட்டு விவகாரம்: ஜெகன்மோகன் ரெட்டி வீட்டை முற்றுகையிட்ட பாஜகவினர் கைது

திருப்பதி லட்டு விவகாரம்.. சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்